Type Here to Get Search Results !

ஜூன்29

👉 வ.ஐ.சுப்பிரமணியம் நினைவு தினம்


🌷 2007ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதி ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் (iPhone) வெளியிடப்பட்டது.


பி.சி.மகாலனோபிஸ்

🌷 இந்தியாவின் ஆரம்பகால வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய கணித மற்றும் புள்ளியியல் மேதை பிரசாந்த சந்திர மகாலனோபிஸ் (Prasanta Chandra Mahalanobis) 1893ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதி கொல்கத்தாவில் பிறந்தார்.

🌷 இவருடைய பிறந்த நாள் தேசிய புள்ளியியல் தினமாக கொண்டாடப்படுகிறது. இவர் கொல்கத்தாவில் இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தை 1931-ல் நிறுவினார். மகாலனோபிஸ் தொலைவு, ரேண்டம் சாம்ப்ளிங் முறை ஆகியவற்றை வரையறுத்துள்ளார்.

🌷 அமெரிக்க எகனாமிக் சொசைட்டியின் ஃபெலோஷிப், பத்மவிபூஷண், சீனிவாச ராமானுஜன் தங்கப்பதக்கம் என ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.

🌷 பொருளாதாரத் திட்டமிடல் மற்றும் புள்ளி விவர வளர்ச்சி துறைகளில் மிக உன்னதமான பங்களிப்பை வழங்கிய மகாலனோபிஸ் 78வது வயதில் (1972) மறைந்தார்.


ஆர்.எஸ்.மனோகர்

🌷 தமிழ் நாடக உலகில் புரட்சியை ஏற்படுத்திய, நாடகக் காவலர் ஆர்.எஸ்.மனோகர் 1925ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதி நாமக்கல்லில் பிறந்தார்.

🌷 இவர் தன்னுடைய பள்ளிப் பருவத்தில் மனோகரா என்ற நாடகத்தில் நடித்ததால், மனோகர் என்னும் பெயர் பெற்றார்.

🌷 இவர் பல்வேறு நாடகங்களை அரங்கேற்றி நடித்துள்ளார். இவர் நடித்த இலங்கேஸ்வரன், சாணக்கிய சபதம், சூரபத்மன், சிசுபாலன், இந்திரஜித், நரகாசுரன், சுக்ராச்சாரியார் உள்ளிட்ட நாடகங்களும் குறிப்பிடத்தக்கவை.

🌷 சினிமா கதாநாயகனாக அறிமுகமான இவர் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இவர் வண்ணக்கிளி, கைதி கண்ணாயிரம், வல்லவனுக்கு வல்லவன், ஆயிரத்தில் ஒருவன், அடிமைப்பெண், இதயக்கனி உட்பட 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர்.

🌷 இவர் இசைப்பேரறிஞர், நாடகக் காவலர் உட்பட பல விருதுகள், பட்டங்கள் பெற்றவர். தமிழ் நாடகத் துறையில் ஒரு திருப்புமுனையை உருவாக்கிய ஆர்.எஸ்.மனோகர் 80வது வயதில் (2006) மறைந்தார்.


🌷 2009ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதி மொழியியல் அறிஞர் வ.ஐ.சுப்பிரமணியம் மறைந்தார்.