👉 ரூதர்ஃபோர்டு பிறந்த தினம்
👉 ஜெ.ஜெ.தாம்சன் நினைவு தினம்
🌷 1835ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் மெல்பேர்ன் நகரம் அமைக்கப்பட்டது.
🎬 1957ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி பிரபல நகைச்சுவை நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன் மறைந்தார்.
🌆 2008ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி இந்திய தொழிலதிபர் கே.கே.பிர்லா மறைந்தார்.
🎬 1957ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி பிரபல நகைச்சுவை நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன் மறைந்தார்.
🌆 2008ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி இந்திய தொழிலதிபர் கே.கே.பிர்லா மறைந்தார்.
👥 சர்வதேச காணாமல் போனவர்களின் தினம் ஆகஸ்ட் 30ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. உலகின் பல நாடுகளிலும் காவல் துறையினராலோ அல்லது பாதுகாப்புப் படையினராலோ பல்வேறு காரணங்களால் கைது செய்யப்பட்டு காணாமல் போவோர் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் 1981ஆம் ஆண்டு இத்தினம் தேர்ந்தெடுக்கப்பட்டது.
👥 யுத்தம் மற்றும் ஏனைய காரணங்களினால் காணாமல் போனவர்கள் தொடர்பான தகவல்களை திரட்டிக் கொள்வதற்கான ஒரு முயற்சியாகவே இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
💥 நோபல் பரிசு பெற்ற அணு இயற்பியல் விஞ்ஞானி எர்னஸ்ட் ரூதர்ஃபோர்டு 1871ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி நியூசிலாந்தில் பிறந்தார்.
💥 இவர் யுரேனிய கதிர்வீச்சில் எக்ஸ் கதிர் இல்லாமல் 2 வித்தியாசமான கதிர்கள் இருப்பதைக் கண்டறிந்து அதற்கு ஆல்பா, பீட்டா கதிர்கள் என பெயரிட்டார். காமா கதிர்களையும் கண்டறிந்தார். இவர் மின்காந்த அலைகளைக் கண்டறியும் கருவி உட்பட பல கருவிகளை உருவாக்கியுள்ளார்.
💥 இவர் வாயுக்களில் உள்ள அயனிகளின் தன்மை குறித்து தாம்சனுடன் சேர்ந்து ஆய்வு செய்தார். கதிரியக்கத்தின் மிக முக்கிய அம்சமான எரியாற்றல் குறித்தும் ஆராய்ந்தார். இது, வேதியியல் வினைகளில் இருந்து வெளிப்படும் ஆற்றலைவிட அதிகம் என்று நிரூபித்தார். இதன்மூலம் அணு ஆற்றல் என்ற முக்கியக் கோட்பாட்டை உருவாக்கினார்.
💥 கதிரியக்கத் தனிமங்கள் குறித்த ஆய்வுகள் மற்றும் தனிமங்களில் ஏற்படும் கதிரியக்கச் சிதைவு குறித்த கண்டுபிடிப்புகளுக்காக இவருக்கு 1908-ல் வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவருக்கு 1914-ல் சர் பட்டம் வழங்கப்பட்டது.
💥 அணுக்கரு பற்றிய இவரது கண்டுபிடிப்புகள் தான் அணுக் கட்டமைப்பு குறித்த இன்றைய கோட்பாடுகள் அனைத்துக்கும் அடித்தளமாக விளங்குகின்றன. அணுக்கரு இயற்பியலின் தந்தை என போற்றப்படும் எர்னஸ்ட் ரூதர்ஃபோர்டு தனது 66-வது வயதில் (1937) மறைந்தார்.
🌷 நவீன அணு இயற்பியலின் தந்தை ஜெ.ஜெ.தாம்சன் 1856ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டர் என்ற இடத்தில் பிறந்தார்.
🌷 இவர் அணுவின் அடிப்படைப் பொருளான மின்னணு எனப்படும் எலக்ட்ரானைக் கண்டுபிடித்தார். 1906ஆம் ஆண்டு மின்னிறக்கக் குழாயில் வாயுக்களின் வழியே மின்சாரத்தைச் செலுத்தும்போது ஏற்படும் விளைவுகளைப் பற்றிய இவருடைய ஆய்வுகளுக்காக, நோபல் பரிசு வழங்கப்பட்டது.
🌷 பல பரிசுகள் பெற்று சிறந்து விளங்கிய தாம்சன் 1940ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி தன்னுடைய 83வது வயதில் (1940) மறைந்தார். இங்கிலாந்தின் புகழ்பெற்ற பல மேதைகள் புதைக்கப்பட்ட வெஸ்ட் மினிஸ்டர் அப்பே (West Minister Abbey) என்ற இடத்தில் இவருடைய உடல் அனைத்து மரியாதைகளுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
Social Plugin