Type Here to Get Search Results !

ஆகஸ்ட் 29

👉 தயான் சந்த் பிறந்த தினம்

👉 மைக்கேல் ஜாக்சன் பிறந்த தினம்


🌷 1708ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி செப்பு நாணயம் முதன் முதலில் ஜப்பானில் உருவாக்கப்பட்டது.

🌷 1949ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி இந்திய அறிவியலாளர் கே.இராதாகிருஷ்ணன் கேரளாவில் பிறந்தார்.

🌷 1885ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி கோட்லீப் டாயிம்லர், மோட்டார் சைக்கிளுக்கான காப்புரிமம் பெற்றார்.

🌷 1831ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி மைக்கேல் பாரடே மின்காந்த தூண்டலை கண்டுபிடித்தார்.


தயான் சந்த்

🌷 இந்திய ஹாக்கி ஜாம்பவான் தயான் சந்த் 1905ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி உத்திரப்பிரதேசத்தில் பிறந்தார். இவருடைய பிறந்த தினமே இந்தியாவில் தேசிய விளையாட்டு தினமாக 2012-லிருந்து கொண்டாடப்பட்டு வருகிறது.

🌷 1928, 1932, 1936 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா தங்கப்பதக்கம் வென்றதற்கு இவரே முக்கியக் காரணம். இவர் ஹாக்கி விளையாடும் முறை இன்றளவிலும் வியக்க வைக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது.

🌷 இவர் 1948-ல் ஓய்வு பெற்றார். இவரை கௌரவிக்கும் விதமாக டெல்லி தேசிய மைதானத்துக்கு இவருடைய பெயர் சூட்டப்பட்டுள்ளது. இவருக்கு இந்திய அரசு பத்மபூஷண் விருது அளித்துள்ளது.

🌷 மூன்று முறை ஒலிம்பிக்கில் தங்கம்வென்ற இந்தியாவின் மிகச்சிறந்த ஹாக்கி வீரர் தயான் சந்த் தனது 74வது வயதில் மறைந்தார்.


மைக்கேல் ஜாக்சன்

🌷 இருபதாம் நூற்றாண்டின் மகத்தான பாப் இசைக்கலைஞர் என்று போற்றப்படும் மைக்கேல் ஜோசஃப் ஜாக்சன் 1958ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி அமெரிக்காவின் இன்டியானா நகரில் பிறந்தார்.

🌷 இவர் வெளியிட்ட த்ரில்லர் இசை ஆல்பம்தான் இன்றுவரை உலகிலேயே மிக அதிகமாக விற்பனையான இசை ஆல்பம். இந்த வெற்றி கின்னஸ் சாதனைப் பட்டியலில் இடம் பிடித்தது. இவர் பல கிராமி விருதுகளையும், அமெரிக்க இசை விருதுகளையும் வென்றுள்ளார். கிராமி வாழ்நாள் சாதனையாளர் விருதும் பெற்றுள்ளார்.

🌷 இவரது பிளாக் அன்ட் ஒயிட் என்ற வீடியோ ஒரே நேரத்தில் 27 நாடுகளில் ஒளிபரப்பப்பட்டது. 50 கோடி ரசிகர்கள் இதைக் கண்டு ரசித்தனர். இவருடைய மொத்த ஆல்பங்களும் இதுவரை ஏறக்குறைய 20 கோடி விற்பனையாகி உள்ளன.

🌷 இவர் பாடல் எழுதி, அதற்கு இசையமைத்து, பாடலுக்கு ஏற்றாற்போல நடனம் ஆடுவது, இடையிடையே நடிப்பு என அனைத்தும் கலந்த பாப் நடனத்தைப் படைத்த அபூர்வ இசை மேதை. அமெரிக்காவில் மக்கள் செல்வாக்குப் பெற்ற முதல் கருப்பின இசைக்கலைஞர். இவர் படைத்த ரோபாட், மூன்வாக் போன்ற நடன வகைகள் மிகவும் பிரபலம்.

🌷 இன்றளவும் பாப் இசையுலகின் ஈடு இணையற்ற கலைஞராகப் போற்றப்படும் மைக்கேல் ஜாக்சன், உடல் நலம் பாதிக்கப்பட்டு தனது 50-வது வயதில் (2009) மறைந்தார்.