🌷 1958ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி அமெரிக்காவின் வெற்றிகரமான முதலாவது செய்மதியான எக்ஸ்புளோரர் 1 விண்ணுக்கு ஏவப்பட்டது.
🌷 1946ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி யூகொஸ்லாவியாவில் சோவியத் முறையிலான அரசியலமைப்பு கொண்டு வரப்பட்டு, 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டது.
🌷 1961ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி நாசாவின் மெர்க்குரி-ரெட்ஸ்டோன் 2 விண்கலம் ஹாம் என்ற சிம்பன்சி ஒன்றை விண்ணுக்குக் கொண்டு சென்றது.

🌷 வரகவி என்ற சிறப்பு பெயர் கொண்ட கன்னடக் கவிஞர் த.ரா.பேந்திரே 1896ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி கர்நாடக மாநிலத்திலுள்ள தார்வாடு என்ற இடத்தில் பிறந்தார்.
🌷 இவருடைய இயற்பெயர் தத்தாத்திரேய ராமச்சந்திர பேந்திரே ஆகும். மேலும் இவர் அம்பிகாதனயதத்தா என்ற புனைபெயரில் பல நூல்களை எழுதியுள்ளார். இந்த பெயரின் அர்த்தம் அம்பிகாவின் மகன் தத்தன் என்பதாகும்.
🌷 இவருக்கு கர்நாடக குல திலகம் என்ற பெயரும் உண்டு. இவர் பேச்சு நடையிலேயே கவிதைகளை எழுதினார். இவரது பாடல்களில் நாட்டுப் புற நம்பிக்கைகள், புராணக் கதைகள் ஆகியவற்றைப் பற்றிய குறிப்புகள் இருக்கும்.
🌷 இவருக்கு 1968ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், 1958ஆம் ஆண்டு சாகித்திய அகாடமி விருதும், 1973ஆம் ஆண்டு ஞானபீட விருதும் வழங்கப்பட்டுள்ளது.
🌷 இந்தியாவில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் ஒரு உயரிய விருதான ஞானபீட விருது பெற்ற இவர் தன்னுடைய 85வது வயதில் (1981) மறைந்தார்.
🌷 2009ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி நகைச்சுவை நடிகர் நாகேஷ் மறைந்தார்.
Social Plugin