🌷 1977ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி இந்தியாவின் முதல் இரயில்வே அருங்காட்சியகம் சாணக்கியபுரி, புதுடில்லியில் திறக்கப்பட்டது.
🌷 1884ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி ஆக்ஸ்ஃபோர்டு ஆங்கில அகராதியின் முதல் பதிப்பு வெளியானது.
🌷 1884ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி ஆக்ஸ்ஃபோர்டு ஆங்கில அகராதியின் முதல் பதிப்பு வெளியானது.
🌷 விடுதலைப் போராட்ட வீரரும், சென்னையின் முன்னாள் முதல்வருமான ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் 1895ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி திண்டிவனம் அருகே உள்ள ஓமந்தூர் கிராமத்தில் பிறந்தார்.
🌷 இவர் மிக இளம்வயதிலேயே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கிவிட்டார். இந்தியா சுதந்திரம் பெற்றவுடன் ஹைதராபாத்தை இந்தியாவுடன் இணைப்பதில் பெரும் பங்காற்றினார்.
🌷 இவர் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக மார்ச் 23, 1947ஆம் ஆண்டு முதல் ஏப்ரல் 6, 1949ஆம் ஆண்டு வரை பதவியில் இருந்தார். இவரது ஆட்சிக்காலத்தில் தாழ்த்தப்பட்டோர் கோவிலுக்குள் செல்வதற்கான முழு உரிமை அதிகாரச் சட்டம் 1947ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. ஜமீன்தார் இனமுறையை ஒழித்தார், ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தார்.
🌷 முதல்வர் பதவியிலிருந்து விலகிய பிறகு இவரது மனம் ஆன்மீகத்திலும், சமூக சேவையிலும் நாட்டம் கொண்டது. வள்ளலாரால் ஈர்க்கப்பட்டு, சமரச சுத்த சன்மார்க்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். பல தொண்டு அமைப்புகளை நிறுவினார்.
🌷 நேர்மையும், துணிச்சலும் மிக்க அரசியல்வாதியாகப் போற்றப்படும் இவர், 1970ஆம் ஆண்டு தனது 75வது வயதில் மறைந்தார்.
🌷 அமெரிக்க முன்னோடி உளவியலாளரும், கல்வியாளருமான கிரான்வில் ஸ்டான்லி ஹால் 1846ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாநிலம் ஆஷ்ஃபீல்டு நகரில் பிறந்தார்.
🌷 இவர் படித்த 'பிரின்சிபல்ஸ் ஆஃப் பிசியலாஜிகல் சைக்காலஜி' என்ற நூல், இவருக்கு வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அமெரிக்காவில் உளவியல் துறையில் டாக்டர் பட்டம் பெற்ற முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றார்.
🌷 பால்டிமோர் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் அமெரிக்காவிலேயே முறை சார்ந்த முதலாவது உளவியல் ஆய்வுக்கூடத்தைத் தொடங்கினார்.
🌷 மத உளவியல் சம்பந்தமாக 'ஜீசஸ் தி கிறைஸ்ட் இன் தி லைட் ஆஃப் சைக்காலஜி' என்ற நூலை 1917ஆம் ஆண்டு வெளியிட்டார். மானுடவியல், குழந்தைப்பருவ நடத்தைகள் குறித்து பல நூல்களை எழுதினார். முதுமையடைவது குறித்த நூலை 78வது வயதில் எழுதினார்.
🌷 குழந்தை உளவியல், உளவியல் கல்வியின் ஆரம்பகர்த்தா என்று போற்றப்படும் ஸ்டான்லி ஹால் 78வது வயதில் (1924) மறைந்தார்.
🌷 இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா 1962ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் தேதி ஹரியானா மாநிலத்தில் உள்ள கர்னால் என்ற நகரத்தில் பிறந்தார். இவருடைய பள்ளி சான்றிதழ்களில் 1961ஆம் ஆண்டு, ஜூலை 1ஆம் தேதி பிறந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
🌷 இவர் 1997ஆம் ஆண்டு கொலம்பிய விண்கலம் எஸ்.டி.எஸ்-87ல் ஆறு வீரர்கள் கொண்ட குழுவுடன் முதல்முறையாக விண்வெளிக்கு சென்றார். இந்த விண்கலம் விண்வெளியில் 372 மணிநேரம் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு 252 தடவை பூமியைச் சுற்றியது.
🌷 மீண்டும் 2003ஆம் ஆண்டு கொலம்பியா விண்கலம் எஸ்.டி.எஸ்-107ல் கல்பனா உள்ளிட்ட ஏழு வீரர்கள் அடங்கிய குழு சென்றனர். பிப்ரவரி 1ஆம் தேதி, பயணம் முடித்து விண்கலம் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக, விண்கலம் வெடித்துச் சிதறியது. இதில் கல்பனா உட்பட ஏழு பேரும் உயிரிழந்தனர்.
🌷 வானத்தை வசப்படுத்திய கல்பனா சாவ்லாவை கௌரவிக்கும் விதமாக கர்நாடக அரசும், இந்திய அரசும் சாதனை புரியும் பெண்களுக்கு இவரது பெயரில் விருது வழங்கி வருகிறது.
Social Plugin