Type Here to Get Search Results !

பிப்ரவரி 4

👉 உலக புற்றுநோய் தினம்

👉 வீரமாமுனிவர் நினைவு தினம்


🌷 1974ஆம் தேதி பிப்ரவரி 4ஆம் தேதி இந்திய இயற்பியலாளர் சத்தியேந்திர நாத் போஸ் மறைந்தார்.


உலக புற்றுநோய் தினம்

🍁 ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 4ஆம் தேதி உலக புற்றுநோய் தினமாக அனுசரிக்கப்படுகிறது. புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு வருடமும் இந்த நாள் மருத்துவ உலகில் மிக முக்கியமான தினமாக பார்க்கப்படுகின்றது.


ரோசா பார்க்ஸ்

🌷 நவீன குடியுரிமை இயக்கத்தின் தாய் என போற்றப்பட்ட ரோசா பார்க்ஸ் 1913ஆம் தேதி பிப்ரவரி 4ஆம் தேதி அமெரிக்காவின் அலபாமா மாநிலம், டஸ்கிகீ நகரில் பிறந்தார். ரோசா லூசி மெக்காலி என்பது இவரது இயற்பெயர்.

🌷 அந்த காலகட்டத்தில் இன வேற்றுமை சட்டங்கள் அமலில் இருந்தன. பொது போக்குவரத்துகளில் கருப்பினர்களுக்குத் தனியான இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. வெள்ளையர்கள் அதிகமாக இருந்தால் இவர்கள் தங்கள் இடத்தை விட்டுத்தர வேண்டும்.

🌷 ஒருமுறை பேருந்து கூட்டமாக இருந்த போது இவர் தன் இருக்கையை அவர்களுக்கு விட்டுத் தர மறுத்துவிட்டார். பிறகு 'மான்ட்கோமரி பேருந்து புறக்கணிப்பு' என்ற வரலாற்றுப் புகழ்பெற்ற அறப்போராட்டப் புயலாக மாறியது.

🌷 இறுதியில் அமெரிக்க உச்சநீதிமன்றம் இச்சட்டத்தை அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று அறிவித்தது. இவரது பிறந்த தினம் (பிப்ரவரி 3, California and Missouri) மற்றும் இவர் கைது செய்யப்பட்ட தினம் (டிசம்பர் 1, Ohio and Oregon) இரண்டுமே 'ரோசா பார்க்ஸ் தினம்' என்று பல இடங்களில் கொண்டாடப்படுகிறது.

🌷 இனவெறிக்கு எதிராக அறவழியில் போராடிய ரோசா பார்க்ஸ் தனது 92வது வயதில் (2005) மறைந்தார்.


வீரமாமுனிவர்

🌷 மகத்தான தமிழ் அறிஞர் வீரமாமுனிவர் 1680ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி இத்தாலியில் பிறந்தார். கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி என்ற தனது இயற்பெயரை முதலில் தைரியநாதன் என்று மாற்றிக் கொண்டார். பிறகு அதுவும் சமஸ்கிருதம் என்று அறிந்து வீரமாமுனிவர் என்று மாற்றிக்கொண்டார்.

🌷 இவர் இலக்கணம், இலக்கியம், அகராதி ஆகியவற்றை படைத்தார். திருக்குறளை லத்தீன் மொழியிலும் மற்றும் தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திச்சூடி ஆகியவற்றை பல்வேறு ஐரோப்பிய மொழிகளிலும் மொழிப்பெயர்த்து வெளியிட்டார்.

🌷 தொன்னூல் விளக்கம் என்ற நூலில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து இலக்கணங்களை தொகுத்தார். கொடுந்தமிழ் இலக்கணம் என்ற நூலில், தமிழ் மொழியில் முதன்முதலாகப் பேச்சுத்தமிழை விவரித்தார்.

🌷 இவர் இயேசு காவியமான தேம்பாவணியை இயற்றியுள்ளார். இவர் தமிழில் 23 நூல்களை எழுதியுள்ளார். தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் சிறப்பான பணிகளைச் செய்த வீரமாமுனிவர் 1747ஆம் தேதி பிப்ரவரி 4ஆம் தேதி மறைந்தார்.