👉 மோதிலால் நேரு நினைவு தினம்
🌷 1827ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதி கர்நாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவரான சியாமா சாஸ்திரி மறைந்தார்.
🌷 பிரிட்டிஷ் இந்தியாவின் முக்கிய தலைவர்களுள் ஒருவரும், எல்லைக் காந்தி என்றும் அழைக்கப்படும் கான் அப்துல் கஃபார் கான் 1890ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதி பிரிட்டிஷ் இந்தியாவின் பஞ்சாப் மாகாணம் உத்மான்ஜாய் என்ற கிராமத்தில் பிறந்தார்.
🌷 காந்திஜியின் அகிம்சை கொள்கைகளாலும், போராட்ட முறைகளாலும் கவரப்பட்டு அரசியலில் நுழைந்தார். இவர் மகாத்மா காந்தியின் நெருங்கிய நண்பர். அஞ்சுமான் என்ற அமைப்பை உருவாக்கிய இவர் அதன்மூலம் தன் மக்களுக்கு கல்வி கற்பித்தல், அன்பு வழியை போதித்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டார்.
🌷 பின்பு தனது அமைப்பை காங்கிரஸுடன் இணைத்தார். 1929ஆம் ஆண்டு குதாய் கித்மத்கர் என்ற அமைதி இயக்கத்தை தொடங்கினார். சமூக சீர்திருத்தத்திற்கும், பிரிட்டிஷ் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரவும் இந்த அமைப்பு உதவியாக இருந்தது.
🌷 இவருக்கு பாரத ரத்னா விருது 1987ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இந்த விருதை பெற்ற முதல் வெளிநாட்டவர் இவர்தான். பாட்ஷா கான் என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட கான் அப்துல் கஃபார் கான் தனது 97வது வயதில் (1988) மறைந்தார்.
🌷 இரத்த சோகை நோய்க்கு மருந்து கண்டுபிடித்தவர்களுள் ஒருவரான வில்லியம் பாரி மர்பி 1892ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதி அமெரிக்காவில் விஸ்காசினில் ஸ்டோட்டன் என்னுமிடத்தில் பிறந்தார்.
🌷 இறப்பினை விளைவிக்கும் கொடிய நோயான இரத்த சோகைக்கு மருத்துவ சிகிச்சை முறையைக் கண்டுபிடித்த மூவருள் ஒருவர் (மற்ற இருவர் கியார்கு ஹோயித் விப்பிள், கியார்கு ரிச்சர்டு மினோட்). இதற்காக மருத்துவ துறைக்கான நோபல் பரிசை 1934ஆம் ஆண்டு பெற்றார்.
🌷 மருத்துவ துறையில் மக்களுக்கு மகத்தான தொண்டாற்றிய இவர் தன்னுடைய 95வது வயதில் (1987) மறைந்தார்.
(Orkut Buyukkokten)
🌺 ஆர்க்குட் என்ற சமூக வலைதளத்தை கண்டுபிடித்த ஆர்க்குட் புயுக்கோக்டன் 1975ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதி துருக்கியில் பிறந்தார்.
🌺 இவர் அமெரிக்காவில் கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் இருந்த பொழுது கிளப் நெக்சஸ் (Club Nexus) என்னும் அமைப்பை உருவாக்கினார். கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்த பொழுது ஆர்க்குட் என்னும் சமூக வலை அமைப்பை நிறுவினார். இந்த சமூக வலைதளம் ஜனவரி 22, 2004ஆம் ஆண்டு கூகுளினால் தொடங்கி வைக்கப்பட்டது.
🌺 இன்சர்க்கிள் (InCircle) என்ற ஒரு சமூகவலை அமைப்பை அஃவ்வினிட்டி எஞ்சின்ஸ் (Affinity Engines) என்னும் நிறுவனத்திற்காக உருவாக்கியவர்.
🌷 நாட்டின் சுதந்திரத்திற்காகத் தனது செல்வத்தை அர்ப்பணித்த மாபெரும் மனிதர் மோதிலால் நேரு 1861ஆம் ஆண்டு மே 6ஆம் தேதி ஆக்ராவில் பிறந்தார்.
🌷 ஜவஹர்லால் நேரு தான் பிரிட்டிஷ் அரசின் தீமைகளை இவருக்கு எடுத்துச் சொல்லி சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட வைத்தார்.
🌷 இவர் 1905ஆம் ஆண்டு வங்கப் பிரிவினை போதுதான் அவர் முழுமையாக அரசியலில் ஈடுபட்டார். ஜவஹர்லால் நேருவின் தூண்டுதலில் காந்தியுடன் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். மகாத்மா காந்தியின் ஈர்ப்பால் 1918ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
🌷 இரண்டு முறை காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பதவி வகித்தார். எளிமையால் கவரப்பட்டு தனது செல்வங்கள் அனைத்தையும் துறந்த மோதிலால் நேரு தனது 69வது வயதில் 1931ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதி மறைந்தார்.
Social Plugin