Type Here to Get Search Results !

மே 4

👉 சர்வதேச தீயணைக்கும் படையினர் தினம்

👉 திப்பு சுல்தான் நினைவு தினம்




சர்வதேச தீயணைக்கும் படையினர் தினம்

🔥 மே 4ம் தேதி சர்வதேச தீயணைப்புப் படையினர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 1999ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட பெரும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும் போது 5 வீரர்கள் உயிரிழந்தனர்.

🔥 அவர்களை நினைவுகூருவதற்காக உலகம் முழுவதும் மின்னஞ்சல் மூலம் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து உலகம் முழுவதும் மே 4ஆம் தேதி சர்வதேச தீயணைப்புப் படையினர் தினமாகப் பின்பற்றப்படுகிறது.


தியாகராஜ சுவாமிகள்

🎶 'தியாகப் பிரம்மம்' என்று போற்றப்படும் இசை மேதை சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் 1767ஆம் ஆண்டு மே 4ஆம் தேதி திருவாரூரில் பிறந்தார்.

🎶 ஸ்ரீராமகிருஷ்ணானந்தா சுவாமி நாரத உபாசனை மந்திரத்தை இவருக்கு உபதேசித்தார். பக்தியுடன் அதை உச்சரித்து வந்த இவருக்கு நாரத முனிவரே காட்சி கொடுத்து சங்கீத ஸ்வர ரகசியங்கள் அடங்கிய 'ஸ்வரார்ணவம்' என்ற அரிய நூலை வழங்கியதாக கூறப்படுகிறது.

🎶 இவரது இசைத்திறமை குறித்து கேள்விப்பட்ட சரபோஜி மன்னர் தன் அரசவைக்கு வந்து தன்னைப் புகழ்ந்து பாடச் சொன்னார். ஆனால், ராம பக்தியில் திளைத்திருந்த இவர் மனிதரை துதி செய்து பாடமாட்டேன் என்று மறுத்துவிட்டார்.

🎶 இவர் கீர்த்தனைகள் இயற்றுவது, அவற்றிற்கு இசையமைத்து பாடுவது, வேத பாராயணம் செய்வது, புராணங்கள் கற்பது, இசையை மற்றவர்களுக்கு கற்றுத்தருவது என பல செயல்களை செய்தார்.

🎶 இசைக்கு அளப்பரிய சேவைகள் ஆற்றிய தியாகராஜ சுவாமிகள் 79வது வயதில் (1847) மறைந்தார்.