👉 சர்வதேச மருத்துவச்சி தினம்
👉 கார்ல் மார்க்ஸ் பிறந்த தினம்
👉 மாவீரன் நெப்போலியன் நினைவு தினம்
🌷 1948ஆம் ஆண்டு மே 5ஆம் தேதி நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடி புதுமைப்பித்தன் மறைந்தார்.
🌷 1903ஆம் ஆண்டு மே 5ஆம் தேதி சுதந்திரப் போராட்ட வீரரும், தலைசிறந்த கல்வியாளருமான டி.எஸ்.அவிநாசிலிங்கம் திருப்பூரில் பிறந்தார்.
🌷 1916ஆம் ஆண்டு மே 5ஆம் தேதி முன்னாள் குடியரசுத் தலைவர் கியானி ஜெயில் சிங் பிறந்தார்.
🌷 1903ஆம் ஆண்டு மே 5ஆம் தேதி சுதந்திரப் போராட்ட வீரரும், தலைசிறந்த கல்வியாளருமான டி.எஸ்.அவிநாசிலிங்கம் திருப்பூரில் பிறந்தார்.
🌷 1916ஆம் ஆண்டு மே 5ஆம் தேதி முன்னாள் குடியரசுத் தலைவர் கியானி ஜெயில் சிங் பிறந்தார்.
😃 ஒவ்வொரு வருடமும் மே மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை உலக சிரிப்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இது முதன்முதலில் 1998ஆம் ஆண்டு டாக்டர் மதன் கட்டாரியா என்பவரால் தொடங்கப்பட்டது.
😃 அவர் இதை உலக அமைதிக்காக சிரிப்பு யோகாவாக அறிமுகப்படுத்தினார். உடம்பிற்கும், மனதிற்கும் சிரிப்பு நல்லது என்பதை வலியுறுத்தியே இத்தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
💉 ஆண்டுதோறும் சர்வதேச மருத்துவச்சி தினம் மே 5ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
💉 மருத்துவச்சி என்பவர் பிரசவம் பார்ப்பவர், தாய்-சேய் செவிலி, பேறுகாலப் பணிமகள் மற்றும் மகப்பேறு உதவியாளர் என பலப் பெயர்களில் அழைக்கப்படுகின்றனர்.
💉 இவர்கள் தாய் மற்றும் சேய் ஆகியோரின் நலனைப் பாதுகாப்பவர்களாக பணிபுரிகின்றனர். இவர்களின் அறிவு, திறமை மற்றும் சேவையை போற்றும் வகையில் 1991ஆம் ஆண்டுமுதல் இத்தினம் கொண்டாடப்படுகிறது.
🌷 உலக வரலாற்றில் அழியாத புகழுடன் தலைநிமிர்ந்து நிற்கின்ற மாமேதை கார்ல் மார்க்ஸ் 1818ஆம் ஆண்டு மே 5ஆம் தேதி பிரஷ்யாவிலுள்ள ட்ரையர் நகரில் பிறந்தார்.
🌷 இவர் அறிவியல் சார்ந்த பொதுவுடைமையை வகுத்தவருள் முதன்மையானவர். அரசியல் பொருளாதார வரலாற்றியல் வல்லுனராக, தலைசிறந்த ஆய்வறிஞராக, எழுத்தாளராக, சிந்தனையாளராக, புரட்சியாளராகக் கருதப்படுபவர்.
🌷 பல்வேறு துறைகளிலும் ஏராளமான விவகாரங்கள் பற்றிய ஆய்வுகளையும், கருத்துக்களையும் இவர் வெளியிட்டுள்ளார். ஆனால், இவரது ஆய்வுகளும், கருத்துக்களும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படையில் வரலாற்றை ஆய்வதாகவே அமைந்துள்ளது.
🌷 பொதுவுடைமைக் கொள்கைகளின் முக்கியமானவர்களுள் ஒருவரான கார்ல் மார்க்ஸ் தனது 64வது வயதில் (1883) மறைந்தார்.
🌷 பிரெஞ்சுப் பேரரசர் நெப்போலியன் போனபார்ட் 1769ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி பிரான்ஸின் கார்சிகா தீவில் உள்ள அஜாஸியோ நகரில் பிறந்தார்.
🌷 இவர் போர் வீரருக்கான பயிற்சியை முடித்து, 2-ம் நிலை லெப்டினன்டாக 1785-ல் பதவி ஏற்றார். 1796-ல் படைத்தளபதியாக பதவி உயர்வு பெற்றார். இத்தாலியில் ஆஸ்திரிய படைகளை முறியடித்து புகழ்பெற்றார். பிரெஞ்சு மக்களின் பேராதரவுடன் 1804-ல் 35-வது வயதில் பிரான்ஸ் மன்னராக முடிசூட்டிக்கொண்டார்.
🌷 போர்களில் வெற்றியைக் குவித்தார். தேச நிர்வாகத்துக்கான புதிய சட்டங்களை உருவாக்கினார். இவை கோட் ஆஃப் நெப்போலியன் எனப்படுகின்றன. முடியாது என்ற சொல் என் அகராதியில் கிடையாது என்ற தாரக மந்திரத்திற்குரியவரான இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 52வது வயதில் 1821ஆம் ஆண்டு மே 5ஆம் தேதி மறைந்தார்.
Social Plugin