👉 உலக மண் தினம்
👉 ஜெ.ஜெயலலிதா நினைவு தினம்
🌷 1950ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி இந்திய ஆன்மீகவாதி ஸ்ரீ அரவிந்தர் மறைந்தார்.
🌷 1954ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி தமிழ் எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி மறைந்தார்.
🌷 2013ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி தென்னாப்பிரிக்காவின் கறுப்பினத் தலைவர் நெல்சன் மண்டேலா மறைந்தார்.
🌷 1954ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி தமிழ் எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி மறைந்தார்.
🌷 2013ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி தென்னாப்பிரிக்காவின் கறுப்பினத் தலைவர் நெல்சன் மண்டேலா மறைந்தார்.
🌷 சர்வதேச பொருளாதார மற்றும் சமுதாய முன்னேற்ற தன்னார்வலர்களின் தினம் டிசம்பர் 5ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தன்னார்வ சேவையை உலகம் முழுவதும் செய்ய வேண்டும். நாடுகள் பாதிப்படையும்போது பொருளாதார உதவி மற்றும் உணவு உதவிகளையும் செய்ய வேண்டும் என்பதற்காக ஐ.நா. சபை 1985ஆம் ஆண்டு இத்தினத்தை அறிவித்தது. தன்னார்வலர்களைப் பலப்படுத்தவும், ஊக்கப்படுத்தவும் இத்தினம் கொண்டாடப்படுகிறது.
🌷 உலகின் இயற்கைச் சூழலில் மண் வளமானது மிக முக்கியமான கூறாக இருக்கின்றது. சுற்றுச்சூழல் நிலைத்திருக்க வேண்டுமாயின் மண் வளம் பாதுகாக்கப்பட வேண்டும். இதனை மையமாகக் கொண்டு உலகளாவிய ரீதியில் மக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்காக ஐ.நா. சபையின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் டிசம்பர் 5ஆம் தேதியை உலக மண் தினமாகக் கடைபிடித்து வருகிறது.
🌷 உலகப் புகழ் பெற்ற ஓவியர் வால்ட் டிஸ்னி 1901ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி அமெரிக்காவிலுள்ள சிக்காகோவில் பிறந்தார்.
🌷 இவர் மிக சிறந்த காட்டூன் ஓவியர். இவர் தன்னுடைய பணியார்களும் சேர்ந்து உருவாக்கிய கற்பனை தான் மிக்கி மௌஸ், டொனால்ட் டக், ஸில்லி சிம்பொனிஸ் போன்றவற்றைகளாகும்.
🌷 வால்ட் டிஸ்னி திரைப்பட, இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் பணிபுரிந்தவர். மேலும் இவர் வணிக நோக்குடைய பூங்கா மற்றும் அசைப்படம் எடுப்பதில் வல்லுனராக இருந்தார்.
🌷 இவர் ஐம்பத்தி ஒன்பது ஆஸ்கார் விருதுக்கான நியமிக்கப்பட்டு , இருபத்திரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்றுள்ளார். இதில் ஒரே ஆண்டில் நான்கு வென்றது ஓர் உலகசாதனையாகும். மிக அதிக முறை ஆஸ்கர் விருதுக்கான நியமனம செய்யப்பட்ட வால்ட் டிஸ்னி தன்னுடைய 65வது வயதில் (1966) மறைந்தார்.
🌷 தமிழக முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி ஜெ.ஜெயலலிதா அவர்கள் 1948ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி மைசூரில் பிறந்தார்.
🌷 தனது குழந்தை பருவத்திலிருந்தே, கல்வியில் சிறந்து விளங்கிய ஜெயலலிதா அவர்கள், சட்டம் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டார். ஆனால் சூழ்நிலை காரணமாக ஷங்கர்.வி.கிரி அவர்கள் இயக்கிய 'எபிஸில்' என்ற ஆங்கில படம் மூலமாக தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கினார்.
🌷 இவர் 'வெண்ணிற ஆடை' என்ற படம் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவரது திரை வாழ்க்கைக்கு ஒரு முடிவை தந்த படம் 1980ஆம் ஆண்டு வெளியான 'நதியை தேடி வந்த கடல்' ஆகும்.
🌷 அதே ஆண்டில், அதிமுக நிறுவனரான எம்.ஜி.ஆர் அவர்கள், இவரை பிரச்சார செயலாளராக நியமித்தார். நான்கு ஆண்டுகளுக்கு பின்னர், அவர் மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட்டார்.
🌷 எம்.ஜி.ஆரின் மரணத்திற்கு பின், ஜானகி ராமச்சந்திரன் அவர்களை அதிமுகவின் எதிர்கால தலைவராக கட்சி உறுப்பினர்கள் பரிந்துரைத்தனர். ஆனால் 1989ஆம் ஆண்டு அதிமுக கட்சி ஒன்றுபட்டு ஜெயலலிதா தலைமையில் செயல்பட்டது. இவருக்கு தமிழ்நாடு அரசு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்தது.
🌷 1991, 2001, 2011, 2015 மாநில சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்று, தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்றார். தமிழ்நாட்டின் தங்க தாரகையாக திகழ்ந்த ஜெயலலிதா அவர்கள் தன்னுடைய 68வது வயதில் 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மறைந்தார்.
Social Plugin