Type Here to Get Search Results !

அக்டோபர்6

👉 இந்திய வானியற்பியலாளர் மேகநாத சாஃகா பிறந்த தினம்


🌷 1995ஆம் ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி விண்மீன் 51 பெகாசி கண்டறியப்பட்டது.

🌷 1927ஆம் ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி முதலாவது பேசும்படம் தி ஜாஸ் சிங்கர் (The Jazz Singer) வெளியானது.


மேகநாத சாஃகா

🌷 இந்திய வானியற்பியலாளர் மேகநாத சாஃகா 1893ஆம் ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி வங்காளதேசத்தில் உள்ள டாக்கா என்னும் நகரில் பிறந்தார்.

🌷 இவர் சாஃகா அயனியாக்க சமன்பாடு என்ற புகழ்பெற்ற சமன்பாட்டைத் தருவித்தவர். இந்தச் சமன்பாடு விண்மீன்களின் புறநிலை மற்றும் வேதி இயல்புகளைப் பற்றி அறிய உதவுகிறது. இந்தியாவின் அறிவியல் ஆராய்ச்சித் துறையில் இவர் அமைத்த அடித்தளம் முக்கியமானது.

🌷 புகழ்பெற்ற இயற்பியலாளராக அறியப்பட்டாலும் சாஃகா தீவிர சமுதாய நலநோக்குடைய சமூக ஆர்வலராகவே சிறுவயது முதல் இருந்தார்.

🌷 இவர் 1956ஆம் ஆண்டு தன்னுடைய 62வது வயதில் மறைந்தார்.


ரிச்சர்டு டீடிகைண்டு

🌷 இயற்கணிதம், இயற்கணித எண் கோட்பாடு, மெய்யெண் ஆகியவற்றில் முக்கியப் பங்காற்றிய ரிச்சர்டு டீடிகைண்டு (Richard Dedekind) 1831ஆம் ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி ஜெர்மனியில் பிறந்தார்.

🌷 இவர் கணக் கோட்பாட்டில் ஆற்றிய பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. இவர் 1916ஆம் ஆண்டு தன்னுடைய 84வது வயதில் மறைந்தார்.


🌷 1962ஆம் ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்வர் ப.சுப்பராயன் மறைந்தார்.