Type Here to Get Search Results !

அக்டோபர்7

👉 சுதந்திரப் போராட்ட வீராங்கனை துர்காவதி தேவி பிறந்த தினம்


🌷 1931ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில் இனவெறி ஆட்சியை எதிர்த்துப் போராடிய பாதிரியார் டெஸ்மண்ட் டூட்டு தென்னாப்பிரிக்காவில் பிறந்தார்.

🌷 1806ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி ரால்ஃப் வெட்ஜ்வூட் (Ralph Wedgwood) என்பவரால் கார்பன் தாளுக்கான காப்புரிமம் பெறப்பட்டது.


துர்காவதி தேவி

🌷 சுதந்திரப் போராட்ட வீராங்கனை துர்காவதி தேவி 1907ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் பிறந்தார்.

🌷 இந்திய விடுதலைப் புரட்சி இயக்கத்தைச் சேர்ந்த பகவதி சரண் வோரா என்பவரை திருமணம் செய்து கொண்டு ஹிந்துஸ்தான் சோஷலிஸ்ட் ரிபப்ளிக் கட்சியின் செயல்துடிப்பு மிக்க உறுப்பினராக மாறினார்.

🌷 இருவரும் தங்களுக்கு கிடைத்த செல்வத்தை விடுதலைப் போராட்ட இயக்கத்துக்கு செலவழித்தனர். லாலா லஜபதி ராயின் மரணத்துக்குப் பழி வாங்குவதற்காக திட்டம் தீட்ட கட்சியின் கூட்டம் இவரது தலைமையில் நடைபெற்றது.

🌷 பஞ்சாப் சிங்கத்தின் மரணத்துக்கு காரணமான காவல்துறை அதிகாரி ஸ்காட்டை கொலை செய்ய முடிவு செய்யப்பட்டது. முதலில் தானே இந்தப் பணியை மேற்கொள்ள விரும்பினார். ஆனால், இறுதியில் பகத் சிங் மற்றும் சுகதேவிடம் இந்தப் பணி ஒப்படைக்கப்பட்டது.

🌷 தன் கணவர் மறைந்த பிறகு 1940-ல் லக்னோவில் ஏழைக் குழந்தைகளுக்காக ஒரு பள்ளியைத் தொடங்கினார். இந்திய அக்னி என போற்றப்பட்ட வீராங்கனையான துர்காவதி தேவி 1999ஆம் ஆண்டு தனது 92வது வயதில் மறைந்தார்.


நீல்ஸ் போர்

🌷 அணு அமைப்பு பற்றிய ஆராய்ச்சிகளில் முன்னோடியாக திகழ்ந்த நீல்ஸ் ஹென்றிக் டேவிட் போர் 1885ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி டென்மார்க் நாட்டிலுள்ள கோப்பன்ஹேகனில் பிறந்தார்.

🌷 இவர் முதன்முதலாக 1913-ல் எலெக்ட்ரான்கள் அணுக்களின் உட்கருவை சுற்றி வட்டப்பாதையில் சுழலுகின்றன என்பதை கண்டறிந்தவர்.

🌷 அணுக்களின் கட்டமைப்புக்கும், குவாண்டம் இயக்கவியலுக்கும் அடிப்படை விதிகளை உருவாக்கியவர். இதற்காக போர் 1922ல் இயற்பியலுக்கான நோபல் பரிசினையும் பெற்றார்.

🌷 இருபதாம் நூற்றாண்டின் மிகச்சிறந்த அறிவியலறிஞராகவும், சிந்தனையாளராகவும் விளங்கிய நீல்ஸ் போர் 1962ல் நவம்பர் 18ஆம் தேதி மறைந்தார்.