Type Here to Get Search Results !

பிப்ரவரி 7

👉 தேவநேயப் பாவாணர் பிறந்த தினம்


🌷 1992ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி ஐரோப்பிய ஒன்றியம் அமைப்பதற்கான மாஸ்ட்ரிக்ட் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

🌷 1979ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி புளூட்டோ, நெப்டியூனின் சுற்றுப்பாதைக்குள் நுழைந்தது.


தேவநேயப் பாவாணர்

🌷 மொழிஞாயிறு என்று போற்றப்படும் தமிழறிஞர் தேவநேயப் பாவாணர் 1902ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் பிறந்தார். இவரின் இயற்பெயர் தேவநேசன்.

🌷 1925ஆம் ஆண்டு சிறுவர் பாடல் திரட்டு என்ற இவரது முதல் நூல் வெளிவந்தது. இவர் 40-க்கும் மேற்பட்ட நூல்கள், 150-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளை எழுதியுள்ளார்.

🌷 தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சமஸ்கிருதம் ஆகிய இந்திய மொழிகள், ஆங்கிலம், பிரெஞ்சு, லத்தீன், கிரேக்கம் ஆகிய வெளிநாட்டு மொழிகள் உட்பட 17 மொழிகளின் இலக்கணங்களைக் கற்றவர்.

🌷 இவர் 1974ஆம் ஆண்டு தமிழக அரசின் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டத்தின் (Tamil Etymological Project) முதல் இயக்குநராகப் பொறுப்பேற்று முத்திரை பதித்தவர்.

🌷 இவர் 'உலகத்தின் முதல் மொழி தமிழ். உலகின் முதல் மனிதன் தமிழன்', 'தமிழ் திராவிட மொழிகளுக்கு தாய்' என்று கூறியவர். தமிழுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட தேவநேயப் பாவாணர் தனது 78வது வயதில் (1981) மறைந்தார்.


ஜி.ஹெச்.ஹார்டி

🌷 கணிதமேதை ராமானுஜனை உலகுக்கு அறிமுகம் செய்த ஜி.ஹெச்.ஹார்டி 1877ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி இங்கிலாந்தின் சர்ரே பகுதியில் பிறந்தார்.

🌷 2 வயதிலேயே, மில்லியன் வரை எண்களை எழுதும் அளவிற்கு ஆற்றல் பெற்றிருந்தார்.ஜே.இ.லிட்டில்வுட் என்ற கணிதவியலாளருடன் இணைந்து, 35 ஆண்டுகாலம் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார். ஏராளமான கட்டுரைகளை வெளியிட்டார்.

🌷 இந்திய கணிதமேதை ராமானுஜனிடம் இருந்து இவருக்கு ஒரு கடிதம் வந்தது. அதை பார்த்ததுமே, ராமானுஜனின் அறிவாற்றலைப் புரிந்துகொண்டார். அவருக்கு வழிகாட்டியாக விளங்கினார்.

🌷 இருவரும் இணைந்து ஆய்வுகள் மேற்கொண்டு வெளியிட்ட 'ஹார்டி - ராமானுஜன் அசிம்டாடிக்' சூத்திரம் மிகவும் பிரபலமானது. இவரது வாழ்க்கை மற்றும் ராமானுஜனுடனான நட்பு ஆகியவற்றை தொகுத்து 'தி இந்தியன் கிளார்க்' என்ற நாவல் 2007ஆம் ஆண்டு வெளிவந்தது.

🌷 இவர் ராயல் மெடல், சில்வெஸ்டர் மெடல், காப்ளே மெடல் உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். உலகின் தலைசிறந்த கணிதமேதைகளில் ஒருவரான ஜி.ஹெச்.ஹார்டி தனது 70வது வயதில் (1947) மறைந்தார்.