Type Here to Get Search Results !

ஜூன் 7

👉 இந்திய டென்னிஸ் விளையாட்டு வீரர் மகேஷ் பூபதி பிறந்த தினம்


🌷 1917ஆம் ஆண்டு ஜூன் 7ஆம் தேதி புலிட்சர் விருது பெற்ற முதல் ஆப்பிரிக்க-அமெரிக்க பெண் கவிஞர் குவெண்ட்லின் எலிசபெத் ப்ரூக்ஸ் (Gwendolyn Elizabeth Brooks) அமெரிக்காவின் கான்சாஸ் மாநில தலைநகர் டொபீகாவில் பிறந்தார்.


மகேஷ் பூபதி

🌷 இந்திய டென்னிஸ் விளையாட்டு வீரர் மகேஷ் ஸ்ரீனிவாஸ் பூபதி (Mahesh Shrinivas Bhupathi) 1974ஆம் ஆண்டு ஜூன் 7ஆம் தேதி சென்னையில் பிறந்தார்.

🌷 இவர் 1995ஆம் ஆண்டிலிருந்து விளையாடி வருகிறார். உலகின் சிறந்த இரட்டையர் டென்னிஸ் வீரர்களில் இவரும் ஒருவராவார்.

🌷 இவர் கலப்பு இரட்டையர் பிரிவில், சானியா மிர்சாவுடன் இணைந்து 2009-ல் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தையும், 2012-ல் பிரெஞ்சு ஓபன் பட்டத்தையும் வென்றார்.

🌷 2001-ல், இந்தியாவின் மிக உயர்ந்த குடிமகன் விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், இவர் சர்வதேச டென்னிஸ் பிரீமியர் லீக்கின் இயக்குனராக உள்ளார்.


காஜா அஹமது அப்பாஸ்

🎥 இந்தி திரைப்பட இயக்குநர் மற்றும் நாவல் ஆசிரியரான காஜா அஹமது அப்பாஸ் (Khwaja Ahmad Abbas) 1914ஆம் ஆண்டு ஜூன் 7ஆம் தேதி அரியானாவில் பானிபட் என்னும் ஊரில் பிறந்தார்.

🎥 இவர் பிளிட்ஸ் இதழில் சேர்ந்த பிறகு, அதன் உருது பதிப்பில் ஆசாத் காலம் என்ற தலைப்பில் எழுதிய தொடர் இந்திய வரலாற்றில் நீண்ட கால அரசியல் தொடராகும்.

🎥 இவர் தர்தி கே லால் (Dharti Ke Lal) என்ற திரைப்படத்தை முதன்முதலாக இயக்கினார். இவர் திரைக்கதை எழுதிய ராஜ்கபூரின் படங்களான ஆவாரா, ஸ்ரீ 420, ஜாக்தே ரஹோ, மேரா நாம் ஜோக்கர், ஹென்னா போன்றவை பிரபலமானது.

🎥 இவர் நர்கீஸ் தத் விருது (Nargis Dutt Award), வோரோஸ்கி இலக்கிய விருது, காலிப் விருது, பத்மஸ்ரீ உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

🎥 பல களங்களில் தனி முத்திரை பதித்த காஜா அஹமது அப்பாஸ் 72வது வயதில் (1987) மறைந்தார்.