👉 உலக மூளைக்கட்டி தினம்
🌷 1845ஆம் ஆண்டு ஜூன் 8ஆம் தேதி அமெரிக்காவின் 7வது அதிபரான ஆன்ட்ரூ ஜாக்ஸன் (Andrew Jackson) மறைந்தார்.
🌷 1992ஆம் ஆண்டு, ஜூன் 8ஆம் தேதி பூமியை பாதுகாப்போம் என்கின்ற உடன்படிக்கை உருவானது. அந்த தினத்தையே உலக பெருங்கடல் தினமாக கொண்டாடுகிறோம்.
🌷 சுற்றுச்சூழல் பாதிப்பால் கடல் பாதிப்படைகிறது. இதனால் கடலில் வாழும் உயிரினங்கள் அழிகின்றன. கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்கவும், கடல் உணவுகள் பற்றி அறியவும், பெருங்கடலுக்கு மரியாதை செலுத்தவும் உலக பெருங்கடல் தினம் கொண்டாடப்படுகிறது.
🌷 ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 8ஆம் தேதி உலக ப்ரெய்ன் டியூமர் தினம் (அ) உலக மூளைக்கட்டி தினம் கடைபிடிக்கப்படுகிறது.
🌷 இத்தினம் அனைத்து மூளைக்கட்டி நோயாளிகளுக்கும் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக 2000ஆம் ஆண்டிலிருந்து அனுசரிக்கப்படுகிறது.
🌷 உலக தமிழர் மேம்பாட்டுக்காக தன்னை அர்ப்பணித்து கொண்ட இர.ந.வீரப்பன் 1930ஆம் ஆண்டு ஜூன் 8ஆம் தேதி இலங்கையில் பிறந்தார்.
🌷 இவர் சிறுகதை, ஆராய்ச்சி கட்டுரைகள், ஆய்வு பணிகள், இலக்கிய நாடகம் நடத்துதல், மொழி போராட்டம், உலகளாவிய தமிழ் பண்பாட்டு தொடர்புகள் என பல துறைகளில் தொண்டாற்றியவர்.
🌷 இவரைப் பற்றி தமிழகத்தின் பாவலர் ஐயா கதிர் முத்தையனாரும், லண்டனை சேர்ந்த சுரதா முருகையனாரும் நூல்களை எழுதியுள்ளனர்.
🌷 இவர் தமிழ் உயர்வுக்காக தமிழ் பண்பாட்டு இயக்கத்தை தோற்றுவித்து, அதன் தலைவராக தொண்டாற்றினார்.
🌷 தமிழ் மண், இனம், மொழி, பண்பாடு காக்கப்பட வேண்டும் என்று காலமெல்லாம் முழங்கியதோடு அதற்குரிய ஆக்கப்பூர்வமான பணிகளையும் மேற்கொண்ட இர.ந.வீரப்பன் 69வது வயதில் (1999) மறைந்தார்.
Social Plugin