Type Here to Get Search Results !

செப்டம்பர் 7

👉 எழுத்தாளர் சு.கிருஷ்ணமூர்த்தி மறைந்த தினம்


🌷 1953ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி மலையாள நடிகர் மம்முட்டி கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் வைக்கம் அருகே பிறந்தார்.

🌷 1998ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி கூகுள் ஆரம்பிக்கப்பட்டது.

🌊 1977ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி பனாமா கால்வாய் தொடர்பான உடன்பாடு பனாமா-அமெரிக்கா இடையே எட்டப்பட்டது.

📺 1979ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி இ.எஸ்.பி.என்., தொலைக்காட்சி தனது முதலாவது ஒளிபரப்பை துவக்கியது.


கோபிநாத் கவிராஜ்

✋ சமஸ்கிருத அறிஞரும் தத்துவஞானியுமான பண்டிட் கோபிநாத் கவிராஜ் 1887ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி வங்கதேச தலைநகர் தாக்கா அருகே உள்ள தாம்ரே கிராமத்தில் பிறந்தார்.

✋ யோகியாக, தாந்த்ரீக ஞானியாக விளங்கிய இவர், படைப்பாற்றல் மிக்கவராகவும் திகழ்ந்தார். விஷீத்த வாணி, அகண்ட மஹாயோக், பாரதிய சன்ஸ்க்ருதி கீசாதனா, தாந்த்ரிக் சாஹித்ய உட்பட பல நூல்களைப் படைத்தார்.

✋ பிரிட்டிஷ் அரசு இவருக்கு 1934-ல் மகாமகோபாத்தியாய விருது வழங்கி சிறப்பித்தது. பத்ம விபூஷண், சாகித்ய வாசஸ்பதி, தேஷிகோத்தம், சாகித்ய அகாடமி உள்ளிட்ட பல விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டன.

✋ வேதம், பண்டைய இந்திய வரலாறு, புராணங்கள், இந்திய - ஐரோப்பிய இலக்கியம் ஆகியவற்றில் ஆழ்ந்த ஞானம் பெற்றவர். சாஸ்திரங்கள் பற்றிய அனைத்து விஷயங்களையும் விரல்நுனியில் வைத்திருந்த கலைக்களஞ்சியமாகத் திகழ்ந்தார்.

✋ தத்துவங்கள், மதங்கள் தொடர்பான 1,500 புத்தகங்கள் கொண்ட நூலகத்தை தனிப்பட்ட முறையில் வைத்திருந்தார். புத்தக அறிவு போதாது, அது சுய அறிதலோடு சேர்ந்திருக்க வேண்டும் என்று கூறுவார். தலைசிறந்த தத்துவஞானியான பண்டிட் கோபிநாத் கவிராஜ் தனது 89-வது வயதில் (1976) மறைந்தார்.


🌷 2014ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி எழுத்தாளர் சு.கிருஷ்ணமூர்த்தி மறைந்தார்.