Type Here to Get Search Results !

நவம்பர் 9

👉 தேசிய சட்ட சேவைகள் தினம்

👉 உத்தராஞ்சல் உருவாக்கப்பட்ட தினம்


🌷 2005ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் மறைந்தார்.

🌷 2000ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி உத்தராஞ்சல், இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்திலிருந்து பிரிக்கப்பட்டது.


உலக அறிவியல் தினம்

🌷 சர்வதேச கின்னஸ் உலக சாதனை தினம் நவம்பர் 9ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. உலக சாதனைகளைத் தொகுத்து 1954ஆம் ஆண்டு முதன்முதலாக கின்னஸ் புத்தகம் வெளியிடப்பட்டது.

🌷 முதன்முதலாக கின்னஸ் தினம் 2005ஆம் ஆண்டு நவம்பர் 9ல் கொண்டாடப்பட்டது. இத்தினத்தின்போது கின்னஸ் சாதனைகளைத் தொகுத்து புத்தகமாக வெளியிடப்படுகிறது.


தேசிய சட்ட சேவைகள் தினம்

🌷 சட்ட சேவைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 9ஆம் தேதி மாநில அதிகாரிகள் மூலம் கொண்டாடப்படுகிறது.

🌷 சட்டக் கல்வி சார்ந்த முகாம்கள் நாட்டின் முக்கியமான தலைநகரங்களில் நடத்தப்படுகின்றன. ஊனமுற்றவர்கள், பலவீனமானவர்கள், ஏழைகள், பெண்கள், குழந்தைகள், தாழ்த்தப்பட்டவர்கள், இயற்கை சீற்றத்தால் பாதித்தவர்கள் ஆகியோருக்கு உதவி மற்றும் ஆதரவை வழங்க உச்சநீதிமன்றம் 1995ஆம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி அன்று இலவச சட்ட சேவையை துவக்கியது.

🌷 இளம் வயதில் மாணவர்கள் மற்றும் குழந்தைகள் அரசியலமைப்பு உரிமைகளையும், அதன் தொடர்பான சட்டங்களையும் தெரிந்துகொள்ள இத்தினத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.


முகமது இக்பால்

🌷 கவிஞரும், மெய்யியல் அறிஞருமான சர் முகமது இக்பால் 1877ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி பாகிஸ்தானிலுள்ள சியால்கோட்டில் பிறந்தார்.

🌷 இவர் சட்டம் பயிலும்போதே பல கவிதைகளைப் படைத்தார். இலக்கியத் திறன்தான் இவரை உலகப்புகழ் பெற வைத்தது. இவர் எழுதிய 'சாரே ஜஹான் ஸே அச்சா' பாடல் 1947-ல் இந்திய நாடாளுமன்றத்தில் முதல்முறையாக ஒலித்தது.

🌷 நவீனகால இஸ்லாமிய சிந்தனையாளர் எனப் போற்றப்பட்டார். இவரது முதல் கவிதை நூல் 1915-ல் வெளிவந்தது. கவிதைகள் தவிர சமூகம், கலாச்சாரம், மதம், அரசியல் தொடர்பாக உருது மற்றும் ஆங்கிலத்தில் இவர் ஆற்றிய உரைகள் பிரபலமானவை. உருது பேசும் மக்களால் 'கிழக்கின் கவிஞர்' என்று குறிப்பிடப்பட்டார்.

🌷 பாகிஸ்தான் அரசு இவரை தேசியக் கவிஞராக அங்கீகரித்து, இவரது பிறந்த தினத்தை 'இக்பால் டே' என்று வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சாகாவரம் பெற்ற 'சாரே ஜஹான் ஸே அச்சா' பாடலை இயற்றிய மகத்தான படைப்பாளியான முகமது இக்பால் 60வது வயதில் (1938) மறைந்தார்.