Type Here to Get Search Results !

ஜூன் 9

👉 கிரண் பேடி பிறந்த தினம்


🌷 1834ஆம் ஆண்டு ஜூன் 09ஆம் தேதி பைபிளை பல இந்திய மொழிகளில் மொழிப்பெயர்த்த வில்லியம் கேரி மறைந்தார்.

🌷 1870ஆம் ஆண்டு ஜூன் 09ஆம் தேதி ஆங்கில எழுத்தாளர் சார்லஸ் டிக்கன்ஸ் மறைந்தார்.


கிரண் பேடி

🌷 இந்தியாவின் முதல் பெண் போலீஸ் அதிகாரி கிரண் பேடி 1949ஆம் ஆண்டு ஜூன் 09ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் பிறந்தார்.

🌷 இவர் 1972-ல் இந்திய காவல்துறையின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார். மேலும், மக்கள் மேம்பாடுகளுக்காக இந்தியா விஷன், நவஜோதி ஆகிய அமைப்புகளை நிறுவியுள்ளார்.

🌷 1979-ல் காவல்துறை வீரப்பதக்கம், போதைப் பொருள் தடுப்பு பணிகளுக்கான நார்வே நாட்டு விருது(Asia Region Award), பிலிப்பைன்ஸ் நாட்டின் மகசேசே உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.

🌷 மேலும், இவர் டென்னிஸ் போட்டியில் ஆசிய அளவிலும், தேசிய அளவிலும் ஏராளமான பரிசுகள், பதக்கங்களை வென்றுள்ளார். இவர் ஏராளமான சீர்திருத்தங்களை கொண்டு வந்தார்.

🌷 பல ஆண்டுகளுக்கு மேல் காவல்துறையில் மகத்தான சேவையாற்றி இன்றும் அதே சுறுசுறுப்புடன் இயங்கி வரும் இவர் இன்று தனது 69வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.


ஜார்ஜ் ஸ்டீபன்சன்

🌷 ரயில் பாதைகளின் தந்தை ஜார்ஜ் ஸ்டீபன்சன் 1781ஆம் ஆண்டு ஜூன் 09ஆம் தேதி இங்கிலாந்தில் உள்ள நார்தம்பர்லேண்டின் பகுதியில் பிறந்தார்.

🌷 இவர் சுரங்கங்களில் ஏற்படும் தீ விபத்துகளில் இருந்து தொழிலாளர்களை காக்க பாதுகாப்பு விளக்கை உருவாக்கியுள்ளார்.

🌷 மர தண்டவாளத்தில் ஓடும் நீராவி இன்ஜினை சரிசெய்து இரும்பு தண்டவாள ரயில் இன்ஜினை வடிவமைத்தார். 1829-ல் ரயில்வே முதலாளிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் இவர் வடிவமைத்த ராக்கெட் என்ற உலகப் புகழ்பெற்ற இன்ஜின் முதல் பரிசை வென்றது.

🌷 இங்கிலாந்தில் செஸ்டர்ஃபீல்டு ரயில் நிலையத்தில் இவரது வெண்கல சிலை மற்றும் ராக்கெட் ரயில் மாதிரி வடிவமும் வைக்கப்பட்டுள்ளது.

🌷 அடிப்படை கல்வி கூட பெறாமல் அறிவியல் களத்தில் அரும்பெரும் சாதனை படைத்த ஜார்ஜ் ஸ்டீபன்சன் 67வது வயதில் (1848) மறைந்தார்.