🌷 1882ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி சென்னையில் முதன் முதலாக தொலைப்பேசி அறிமுகப்படுத்தப்பட்டது.
🌷 இந்தியாவின் விடுதலைக்காக பாடுபட்ட 'பஞ்சாப் சிங்கம்' லாலா லஜபதி ராய் அவர்கள் 1865ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி பஞ்சாபில் பிறந்தார்.
🌷 இவர் சுதேசி இயக்கம் மற்றும் ஒத்துழையாமை இயக்கத்தில் தீவிரமாகப் போராடினார். இவர் சுதந்திரப் போராட்டத்தின் லால்-பால்-பால் (லாலா லஜபதி ராய், பால கங்காதர திலகர், பிபின் சந்திர பால்) என்று அழைக்கப்படும் மூன்று முக்கியத் தலைவர்களுள் ஒருவர்.
🌷 இவர் யங் இந்தியா, அன்ஹேப்பி இந்தியா, சத்ரபதி சிவாஜி உள்ளிட்ட மாவீரர்களின் வாழ்க்கை வரலாறு, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதை போன்ற நூல்களை எழுதியுள்ளார். 1928ஆம் ஆண்டு லாகூர் வந்த சைமன் குழுவுக்கு எதிராக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
🌷 இதில் படுகாயமடைந்த நிலையிலும் கூட்டத்தில் உரையாற்றிய லஜபதி ராய், 'என் மீது விழுந்த அடிகள், இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கான சவப்பெட்டியின் மீது அடிக்கப்படும் ஆணிகள்' என்று கூறினார். இவர் தன்னுடைய 63வது வயதில் (1928) மறைந்தார்.
🌷 இந்திய அணுவியல் நிபுணர் இராஜா இராமண்ணா 1925ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி கர்நாடகா மாநிலத்தில் பிறந்தார். இந்தியாவின் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு மிகச் சிறப்பாகப் பங்காற்றியவர்.
🌷 எழுச்சியூட்டும் தலைவர், இசைக்கலைஞர், இலக்கியம் மற்றும் தத்துவங்களில் மேதை என பன்முகத்தன்மை கொண்ட ஓர் முழுமையான மனிதர் எனப் போற்றப்படுபவர்.
🌷 1974ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி இந்தியாவில் ராஜஸ்தான் பாலைவனத்தில் புவிக்கடியில் நடத்தப்பட்ட 'சிரிக்கும் புத்தர்' (Operation Smiling Buddha) என்ற மறைமுகச் சொல்லைப்பயன்படுத்தி முதல் அமைதியான ஐதரசன் குண்டு வெடிப்பு ஆய்வினை நடத்தியவர்.
🌷 இவர் பத்மஸ்ரீ விருது (1968), பத்ம பூஷண் விருது (1973) போன்ற பல உயரிய விருதுகளைப் பெற்றுள்ளார். இந்தியாவிலும், வெளிநாட்டிலும் இவரின் பல விஞ்ஞான வெளியீடுகள் பதிவாகியுள்ளன. அத்துடன் இவரது சுயசரிதையான, Years of Pilgrimage (1991), The Structure of Music in Raga & Western Systems (1993) என்னும் இரண்டு நூல்களை எழுதியுள்ளார்.
🌷 இந்திய அணுஆற்றல் துறைக்கும் அதன் வளர்ச்சிக்கும் முக்கிய பங்காற்றிய அணுக்கரு அறிவியலறிஞரான இவர் தன்னுடைய 79வது வயதில் (2004) மறைந்தார்.
Social Plugin