📰 இந்திய செய்தித்தாள் தினம் ஆண்டுதோறும் ஜனவரி 29ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
📰 இந்தியாவில் முதன்முதலாக ஹிக்கிஸ் பெங்கால் கெஜெட் (Hickys Bengal Gazette) என்கிற வார இதழ் வெளிவந்தது. இதனை ஆங்கிலேயரான ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி (James Augustus Hicky) என்பவர் 1780ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் தேதி வெளியிட்டார்.
📰 இப்பத்திரிக்கை கொல்கத்தாவிலிருந்து வெளிவந்தது. அரசியல் மற்றும் வர்த்தக ரீதியான இதழாக வெளிவந்தது. அப்போது நடந்த போர் செய்திகளை பத்திரிக்கையில் வெளியிட்டார். இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
🌷 இந்திய விளையாட்டு வீரர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் (Rajyavardhan Singh Rathore) 1970ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஜெய்சல்மேரில் பிறந்தார்.
🌷 இவர் இந்திய துப்பாக்கி சுடுதல் வீரரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் 2004ஆம் ஆண்டு ஏதென்ஸில் நடந்த கோடைக்கால ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
🌷 இதன்மூலம் ஒலிம்பிக் தனிநபர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார்.
🌷 இவர் காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுகளில் பல பதக்கங்களை வென்றுள்ளார். 2005ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது பெற்றார்.
🌷 இவர் இந்திய தரைப்படையில் பணியாற்றி 2013ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். இவர் 2014ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்டு எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
Social Plugin