Type Here to Get Search Results !

ஜனவரி 30

👉 தியாகிகள் தினம்


🌷 1948ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி இந்திய தேசப்பிதா மகாத்மா காந்தி மறைந்தார்.

🌷 1874ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி ஆன்மிகவாதி இராமலிங்க அடிகளார் மறைந்தார்.

🌷 1964ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி ரேஞ்சர் 6 விண்கலம் ஏவப்பட்டது.

🌷 1930ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி உலகின் முதலாவது Radiosonde சோவியத் ஒன்றியத்தில் உருவாக்கப்பட்டது.


தியாகிகள் தினம்

🌷 இந்திய நாட்டின் விடுதலைக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்டு தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த விடுதலைப் போராட்ட வீரத் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தியாகிகள் தினம் ஜனவரி 30ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

🌷 தேசத் தந்தை மகாத்மா காந்தி சுட்டுக்கொள்ளப்பட்ட ஜனவரி 30ஆம் தேதி இந்தியாவில் தியாகிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

🌷 தியாகிகளின் வீரச் செயல்களை நினைவுப்படுத்தி இளம் தலைமுறையினரிடம் நாட்டுப்பற்றை ஏற்படுத்தவும், அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.


சி.சுப்பிரமணியம்

🌷 சுதந்திர இந்தியாவின் பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட தலைவர் சி.சுப்பிரமணியம் 1910ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி பொள்ளாச்சி அருகே செங்குட்டைப்பாளையம் கிராமத்தில் பிறந்தார்.

🌷 இவர் நாடு விடுதலைப் பெற்ற பிறகு, அரசியலமைப்புச் சட்டம் இயற்றுவதில் பங்கேற்றார். இவரது அரசியல் குரு ராஜாஜி ஆவார்.

🌷 1952-1962ஆம் ஆண்டு காலகட்டங்களில் மாநில அரசில் கல்வி, சட்டம், நிதி அமைச்சர், மத்திய எஃகு, சுரங்கத்துறை அமைச்சர், உணவுத்துறை அமைச்சர் போன்ற பதவிகளை வகித்துள்ளார்.

🌷 1969ஆம் ஆண்டு காங்கிரஸ் பிளவுபட்டபோது இந்திரா காந்தி பக்கம் நின்று கட்சித் தலைவரானார். 1972ஆம் ஆண்டு கோதுமை விளைச்சலில் சாதனை படைக்கச் செய்தார். 1990ஆம் ஆண்டு மகாராஷ்டிர ஆளுநராகப் பதவியேற்றார். இவருக்கு 1998ஆம் ஆண்டு 'பாரத ரத்னா' விருது வழங்கப்பட்டது.

🌷 இந்திய விவசாய வளர்ச்சிக்காக பல திட்டங்களை நடைமுறைப்படுத்திய இவர் தனது 90வது வயதில் (2000) மறைந்தார்.