👉 சா.விஸ்வநாதன் பிறந்த தினம்
🌷 610ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி முகம்மது நபி, குர்ஆனை பெற்ற தினம்.
🌷 1948ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி ஜவஹர்லால் நேரு, இந்திய அணுசக்திப் பேரவையைத் துவக்கி வைத்தார்.
🌷 1821ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி மிசௌரி, அமெரிக்காவின் 24வது மாநிலமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
🌃 1927ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி இந்திய வானியலாளர் வைணு பாப்பு சென்னையில் பிறந்தார்.
🌷 1948ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி ஜவஹர்லால் நேரு, இந்திய அணுசக்திப் பேரவையைத் துவக்கி வைத்தார்.
🌷 1821ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி மிசௌரி, அமெரிக்காவின் 24வது மாநிலமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
🌃 1927ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி இந்திய வானியலாளர் வைணு பாப்பு சென்னையில் பிறந்தார்.
🌷 இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் வி.வி.கிரி 1894ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி ஒடிசாவில் உள்ள பெர்ஹாம்பூரில் பிறந்தார்.
🌷 1914-ல் காந்தியை சந்தித்த பிறகு, சட்டம் பயில்வதை விட, விடுதலைப் போராட்டம், தொழிலாளர் உரிமைகளுக்கான போராட்டங்களில் பங்கேற்பதுதான் முக்கியம் என்று நினைத்தார்.
🌷 1936-ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு வென்ற இவர், மதராஸ் மாகாணத்தின் தொழிலாளர் மற்றும் தொழில்துறை அமைச்சராகப் பதவியேற்றார். பிறகு இலங்கைக்கான இந்தியத் தூதர், மத்தியத் தொழிலாளர் துறை அமைச்சர், பல மாநிலங்களின் ஆளுநராகவும் பணியாற்றியிருக்கிறார்.
🌷 அதன்பின் குடியரசுத் துணைத் தலைவர் (1967), குடியரசுத் தலைவர் (1969 இடைக்காலப் பதவி), அதன்பிறகு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வென்று 1974 வரை அப்பதவியில் இருந்தார்.
🌷 இந்தியாவில் தொழிலாளர் சங்கங்கள் வளர்ச்சி பெறுவதற்கு அடித்தளமிட்ட இவர் தனது 86-வது வயதில் (1980) மறைந்தார்.
🌷 தமிழின் மிகச்சிறந்த நகைச்சுவை எழுத்தாளர்களில் ஒருவரான 'சாவி' (சா.விஸ்வநாதன்) 1916ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்த மாம்பாக்கத்தில் பிறந்தார்.
🌷 எழுத்தாளராக வேண்டும் என்பது இவரது கனவு. எனவே 'விடாக்கண்டர்' என்ற பெயரில் எழுதி வந்தார். பின்னர் 'கல்கி' ஆசிரியர் சதாசிவம் இவரை அழைத்து, உதவி ஆசிரியராக நியமித்தார்.
🌷 பிறகு 'சாவி' என்று புனைப்பெயர் சூட்டிக்கொண்டார். தொடர்ந்து கல்கியில் இவர் எழுதிய 'மாறுவேஷத்தில் மந்திரி', 'சூயஸ் கால்வாயின் கதை' உள்ளிட்ட நகைச்சுவைக் கட்டுரைகள் பெரும் வரவேற்பைப் பெற்றன.
🌷 படைப்புகளில் நகைச்சுவையுடன் கருத்துச் செறிவு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, சாதித்துக்காட்ட வேண்டும் என்ற ஆர்வம் கொண்ட சாவி தனது 85-வது வயதில் (2001) மறைந்தார்.
Social Plugin