Type Here to Get Search Results !

ஆகஸ்ட் 9

👉 நாகசாகி தினம்

👉 சர்வதேச உலக பூர்வ குடிமக்கள் தினம்

👉 எஸ்.ஆர்.ரங்கநாதன் பிறந்த தினம்


🌷 1897ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி இந்திய வழக்கறிஞரும், விடுதலைப் போராட்ட வீரருமான ஈ.கிருஷ்ண ஐயர் சென்னை மாகாணம் கல்லிடைக்குறிச்சியில் பிறந்தார்.

🌷 ஞானபீட விருது பெற்ற விநாயக கிருஷ்ண கோகாக் 1909ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி பிறந்தார்.

🌷 1892ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி தாமஸ் ஆல்வா எடிசன் தனது இருவழி தந்திக்கான காப்புரிமம் பெற்றார்.

🌷 1173ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி பைசா நகரின் சாய்ந்த கோபுரத்தின் கட்டிட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டது.


நாகசாகி தினம்

🌷 அமெரிக்கா 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 அன்று ஃபேட் மேன் (Fat Man) என்னும் அணுகுண்டை ஜப்பானில் உள்ள நாகசாகி என்கிற நகரத்தின்மீது வீசியது. இக்குண்டு 3.5 மீட்டர் நீளமும், 1.5 மீட்டர் விட்டமும், 4500 கிலோ எடையும், 1 கிலோ புளுட்டோனியத்தையும் கொண்டது. இக்குண்டு வீசப்பட்ட சில நொடிகளில் 74000 பேர் உயிர் இழந்தனர். அணுகுண்டின் விபரீதத்தை நினைவு கூற இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.



சர்வதேச உலக பூர்வ குடிமக்கள் தினம்

🌷 ஐ.நா.பொதுச்சபை 1994ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று ஒரு தீர்மானத்தில் ஆகஸ்ட் 9ஆம் தேதியை உலக பூர்வ குடிமக்கள் (ஆதிவாசிகள்) தினமாக அறிவித்தது. இத்தினம் 1995ஆம் ஆண்டுமுதல் கடைப்பிடிக்கப்படுகிறது.

🌷 உலகமெங்கும் சுமார் 70 நாடுகளில் ஏறக்குறைய ஐந்தாயிரத்திற்கும் அதிகமான ஆதிவாசியினர் வாழ்கின்றனர். இவர்கள் சுமார் 4000 மொழிகளை பயன்படுத்துபவர்களாக உள்ளனர்.

🌷 பூர்வ குடிமக்களின் கலாச்சாரம் பாதுகாத்தல், அரசியல், கல்வி, மொழி போன்றவற்றைக் கொடுத்தல், இவர்களுக்கு எதிராக நடக்கும் ஆக்கிரமிப்பை தடுத்தல் போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்த இத்தினம் கொண்டாடப்படுகிறது.


எஸ்.ஆர்.ரங்கநாதன்

📚 இந்திய நூலக அறிவியலின் தந்தை எஸ்.ஆர்.ரங்கநாதன் 1892ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி நாகை மாவட்டம் சீர்காழி அடுத்த வேதாந்தபுரம் கிராமத்தில் பிறந்தார்.

📚 இவர் 1924-ல் சென்னை பல்கலைக்கழக நூலகராக நியமிக்கப்பட்டார். பிறகு லண்டன் சென்று, அங்குள்ள சிறந்த நூலகரான டபிள்யூ.சி.பி.சேயர்ஸிடம், நூல்களை வகைப்படுத்தும் கோட்பாட்டை அறிந்தார்.

📚 நூலகம் அறிவுசார் பிரிவினரை ஒன்றிணைத்து, சென்னை நூலகச் சங்கத்தை நிறுவினார். நூலக நிர்வாகம் உள்ளிட்டவை தொடர்பாக 60-க்கும் மேற்பட்ட நூல்கள், 2,000-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதியுள்ளார்.

📚 நூலகத் துறையில் 21 ஆண்டுகளுக்கு மேல் தீவிரமாக செயல்பட்டு பல புரட்சிகளை ஏற்படுத்திய இவர் 1945-ல் ஓய்வுபெற்றார். நூலக அறிவியல் பட்டயப் படிப்பை அறிமுகம் செய்து, தானே கற்பித்தார். இந்திய நூலகச் சங்கத் தலைவராக நியமிக்கப்பட்டார். டெல்லி, பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகங்கள் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கின. பத்மஸ்ரீ விருதும் பெற்றார்.

📚 நூலக அறிவியல், ஆவணப்படுத்துதல், தகவல் அறிவியல் துறைகளின் தந்தை என போற்றப்படும் எஸ்.ஆர்.ரங்கநாதன் 80-வது வயதில் (1972) மறைந்தார். இவரது பெயரில் ஆண்டுதோறும், சிறந்த நூலகர்களுக்கு நல் நூலகர் விருது வழங்கப்படுகிறது.