Type Here to Get Search Results !

ஆகஸ்ட் 12

👉 சர்வதேச இளைஞர் தினம்

👉 உலக யானைகள் தினம்

👉 விக்கிரம் சாராபாய் பிறந்த தினம்


🌷 1851ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி ஐசாக் சிங்கர் தனது தையல் இயந்திரத்துக்கான காப்புரிமம் பெற்றார்.

🌷 1960ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி எக்கோ ஐ என்ற முதலாவது தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் ஏவப்பட்டது.

🌷 1981ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி ஐ.பி.எம். நிறுவனம் தனி மேசைக் கணினியை வெளியிட்டது.

🌷 1877ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி தாமஸ் ஆல்வா எடிசன், போனாகிராபி கருவியைக் கண்டுபிடித்து முதல் ஒளிப்பதிவு செய்து காண்பித்தார்.

🌷 1887ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி குவாண்டம் விசையியலில் முக்கிய பங்காற்றிய எர்வின் சுரோடிங்கர் இங்கிலாந்தில் பிறந்தார்.

🌷 1928ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி தமிழறிஞர் தமிழண்ணல் என்கிற இராம.பெரியகருப்பன் சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை என்ற ஊரில் பிறந்தார்.

🌷 1989ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி டிரான்சிஸ்டரைக் கண்டுபிடித்த மூவருள் ஒருவரான வில்லியம் ஷாக்லி மறைந்தார்.


சர்வதேச இளைஞர் தினம்

🌷 1998ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி முதல் 12ம் தேதி வரை லிஸ்பன் நகரில் நடைபெற்ற உலக நாடுகளின் இளைஞர் விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் குழு சர்வதேச ரீதியில் இளைஞர்களின் பிரச்சனைகளையும், இளைஞர்களின் செயல்பாடுகளையும் கவனத்தில் கொள்ளும் வகையில் இளைஞர்களுக்கான சர்வதேச தினம் ஒன்றை பிரகடனப்படுத்த வேண்டும் என பரிந்துரை செய்தது.

🌷 இதன்படி 1999 டிசம்பர் 17ம் தேதி ஐக்கிய நாடுகள் சபையில் சர்வதேச இளைஞர் தினம் ஆகஸ்ட் 12ம் தேதி கொண்டாடப்பட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது. எனவே இத்தினம் 2000ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகின்றது.


உலக யானைகள் தினம்

🌷 ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12ம் தேதி சர்வதேச யானைகள் தினம் கொண்டாடப்படுகிறது. அக்காலத்தில் காடுகளில் சுதந்திரமாய் சுற்றித் திரிந்த யானைகளை நாம் இப்போது கோவில்களிலும், சர்கஸிலும் தான் காணமுடிகிறது. இன்று, பல யானைகள் தந்தத்திற்காக அதிக அளவில் வேட்டையாடப்படுகின்றன. நம் நாட்டின் செழிப்பு மற்றும் பாரம்பரியத்தின் அடையாளமாக விளங்கும் யானைகளின் இனம் அழிந்து வருவதை பாதுகாக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.


விக்கிரம் சாராபாய்

🌷 இந்திய விண்வெளி அறிவியலின் தந்தை விக்கிரம் ஆம்பாலால் சாராபாய் 1919ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பிறந்தார்.

🌷 சிறுவயதிலிருந்தே கணிதத்திலும், இயற்பியலிலும் அதிக நாட்டம் கொண்டவராக இருந்தார். இங்கிலாந்தில் பிஹெச்.டி. ஆராய்ச்சியை முடித்த பிறகு 1947ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி அகமதாபாத்தில் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தை நிறுவினார்.

🌷 இந்திய தேசிய விண்வெளி ஆராய்ச்சிகளுக்கான குழு பேரவை தொடங்கப்பட்டபோது அதன் தலைவராக நியமிக்கப்பட்டார். 1969-ல் இதற்கு மாற்றாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) தொடங்கப்பட்டது.

🌷 இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ஆரியபட்டாவின் விண்ணேவுதலுக்கு முழுமுதல் காரணமானவர் இவரே. சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது, பத்மபூஷண், பத்ம விபூஷண் (மறைவுக்குப் பிறகு) ஆகிய விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டன.

🌷 இந்திய விண்வெளி ஆராய்ச்சி, அணுசக்தி ஆராய்ச்சி, ஆராய்ச்சிக் கல்வியின் மேம்பாட்டுக்காக கடுமையாக பாடுபட்ட விக்ரம் சாராபாய் 52-வது வயதில் (1971) மறைந்தார்.