Type Here to Get Search Results !

ஆகஸ்ட் 13

👉 சர்வதேச இடது கைப்பழக்கம் உடையோர் தினம்

👉 டி.கே.மூர்த்தி பிறந்த தினம்


🌷 1918ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி இன்சுலினின் கட்டமைப்பு மற்றும் நியூக்கிளிக் அமிலத்தின் சங்கிலித் தொடரை கண்டுபிடித்த பிரெடெரிக் சேனர் இங்கிலாந்தில் பிறந்தார்.

📺 1888ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி தொலைக்காட்சியைக் கண்டுபிடித்த ஜான் லோகி பைர்டு ஸ்காட்லாந்தில் பிறந்தார்.

🌷 1910ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி செவிலியர்களுக்கு முன் உதாரணமாகத் திகழ்ந்த ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் மறைந்தார்.

🌷 1917ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி நுண்ணுயிரி செல்கள் இல்லாமலே நொதிக்கச் செய்யும் முறையைக் கண்டறிந்த எடுவர்டு பூக்னர் மறைந்தார்.

💓 1826ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி இதயத்துடிப்பு மானியைக் கண்டுபிடித்த ரெனே லென்னக் மறைந்தார்.

🏈 2004ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி 28வது ஒலிம்பிக் விளையாட்டுகள் ஏதென்ஸில் ஆரம்பமாயின.

📅 கிமு 3114ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி மாயா நாட்காட்டி தொடங்கப்பட்டது.

💈 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி ஹாரி பிறியர்லி துருப்பிடிக்காத எஃகுவைக் கண்டுபிடித்தார்.

🌷 1954ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி பாகிஸ்தான் தனது தேசிய கீதத்தை முதன் முறையாக வானொலியில் ஒலிபரப்பியது.


சர்வதேச இடது கைப்பழக்கம் உடையோர் தினம்

🌷 உலகின் மொத்த மக்கள் தொகையில் 10 சதவீதம் பேர் இடது கைப்பழக்கம் உடையவர்களாக உள்ளனர் என்று ஐ.நா. அறிக்கை தெரிவிக்கிறது.

🌷 இவர்களது சாதனைகளை பாராட்டும் விதத்திலும், சமூகத்தில் சிறுபான்மையாக உள்ள இவர்கள் பயன்பாட்டுக்கு தகுந்த பொருட்களை தயாரிக்க வலியுறுத்தியும் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 13ஆம் தேதி சர்வதேச இடது கைப்பழக்கம் உடையோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இத்தினத்தை முதன்முதலில் 1976ம் ஆண்டு சர்வதேச இடதுகை அமைப்பு அறிவித்தது.


டி.கே.மூர்த்தி


🌷 தமிழகத்தின் தலைசிறந்த மிருதங்க வித்வான்களில் ஒருவரான டி.கே.மூர்த்தி 1924ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி திருவனந்தபுரம் - கன்னியாகுமாரி வழித்தடத்தில் அமைந்துள்ள நெய்யாத்தங்கரையில் பிறந்தார். தாணு பாகவதர் கிருஷ;ணமூர்த்தி என்பது இவரின் முழுப்பெயர்.

🌷 சிறுவயதிலிருந்தே இவருக்கு மிருதங்கம் வாசிப்பதில் ஆர்வம் அதிகம். தனது ஒன்பது வயதில் ஒரு திருமணத்தில் தவில் வித்துவான் எழுந்துச் சென்றதால் இவர் மிருதங்கம் வாசித்தார்.

🌷 இவரின் திறமையைப் பார்த்து தஞ்சாவூர் வைத்தியநாத அய்யர் தன்னோடு சேர்த்துக் கொண்டார். எம்.எஸ்.சுப்புலட்சுமி, செம்பை வைத்தியநாத பாகவதர் போன்ற பல பிரபலங்களுக்கு வாசித்துள்ளார்.

🌷 மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி விருது, சென்னை மியூசிக் அகாடமியின் 'சங்கீத கலாநிதி' விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்ற இவர் இன்று 94-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.