👉 ஜாகிருதீன் பாபர் பிறந்த தினம்
🌷 1901ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி தமிழகத்தைச் சேர்ந்த இசையியல் அறிஞர் பி.சாம்பமூர்த்தி பிறந்தார்.
🌷 1961ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி 103வது தனிமமான லோரென்சியம் கண்டுபிடிக்கப்பட்டது.
🌷 1961ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி 103வது தனிமமான லோரென்சியம் கண்டுபிடிக்கப்பட்டது.
🌷 ரோமாபுரியை ஆட்சிபுரிந்த இரண்டாம் கிளாடியஸ் என்ற மன்னன் தனது நாட்டில் வாழும் இளைஞர்கள் காதலிக்கக்கூடாது எனத் தடைவிதித்தான். ஆனால் வாலண்டைன் என்கிற கிறிஸ்துவ பாதிரியார் காதலை ஆதரித்து பலருக்கு காதல் திருமணம் செய்து வைத்தார்.
🌷 காதலர்களுக்கு ஆதரவாக இருந்த வாலண்டைனின் தலை ஏறத்தாழ கி.பி.269ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி வெட்டப்பட்டது. அவரின் இறந்த தினமே காதலர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
🌼 முகலாயப் பேரரசர் ஜாகிருதீன் பாபர் 1483ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி உஸ்பெகிஸ்தானில் (ஆசியாவில் உள்ள), பெர்கானாப் பள்ளத்தாக்கிலுள்ள அண்டிஜான் என்னும் நகரத்தில் பிறந்தார்.
🌼 இவரின் ஆட்சிக் காலத்திலேயே நீதித்துறை அமைக்கப்பட்டு, குற்ற நடவடிக்கைகள் கட்டுப்படுத்தவும் ஆரம்பித்தன. இந்தியாவில் முகலாய வம்சத்தை உருவாக்கிய பாபர் தனது 47வது வயதில் (1530) மறைந்தார்.
🌷 முகிலறையை (Wilson cloud chamber) கண்டுபிடித்த சார்ல்ஸ் தாம்சன் ரீஸ் வில்சன் 1869ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி ஸ்காட்லாந்தில் மிட்லோத்தியன் என்ற ஊரில் பிறந்தார்.
🌷 மின்னூட்டமுடைய துகள்களில் நீராவி எளிதில் படிகிறது எனும் உண்மையை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் கருவி முகிலறை. இதற்காக 1927ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற இவர் தனது 90வது வயதில் (1959) மறைந்தார்.
🌺 கோட்பாடு மற்றும் கண்காணிப்பு வானியலில் முக்கியப் பங்காற்றிய ஃபிரிட்ஸ் ஸ்விக்கி 1898ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி பல்கேரியா நாட்டின் வர்னா நகரில் பிறந்தார்.
🌺 இவர் நியூட்ரான் நட்சத்திரங்களைக் (சூப்பர்நோவா) கண்டறிந்தார். 1933ஆம் ஆண்டு கோமா கேலக்ஸி கிளஸ்டர் தொடர்பான ஆராய்ச்சியில் கண்ணுக்குத் தெரியாத பருப்பொருள்களை (டார்க் மேட்டர்) கண்டறிந்தார். இதனால் கரும்பொருளின் தந்தை என போற்றப்படுகிறார்.
🌺 ராக்கெட் உந்துதல் தொடர்பான பங்களிப்புகளுக்காக அமெரிக்க அதிபரின் சுதந்திரப் பதக்கம் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
🌺 வானியலில் பல்வேறு களங்களில் பல முக்கிய பங்களிப்புகளை வழங்கிய ஃபிரிட்ஸ் ஸ்விக்கி 76வது வயதில் (1974) மறைந்தார்.
Social Plugin