Type Here to Get Search Results !

பிப்ரவரி 15

👉 கலீலியோ கலிலி பிறந்த தினம்


🌷 1946ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி ENIAC (Electronic Numerical Integrator and Computer) என்ற முதல் தலைமுறை கணினி அறிமுகமானது.

🌷 1858ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி அமெரிக்க வானியலாளரான வில்லியம் ஹென்றி பிக்கெரிங் பிறந்தார்.

🌷 1988ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளரான ரிச்சர்டு பெயின்மான் மறைந்தார்.


கலீலியோ கலிலி

🌷 அறிவியலில் புரட்சியை ஏற்படுத்திய கலீலியோ கலிலி 1564ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி இத்தாலியில் பிறந்தார்.

🌷 இவர் தூர உள்ள பொருட்களை கிட்டவாக பார்க்கும் பொருளை கண்டறிய ஒரு சாதனத்தை உருவாக்க வேண்டுமென ஆராய்ச்சி மேற்கொண்டார். விடாமுயற்சிக்கு பிறகு 3 மடங்கு உருப்பெருக்கவல்ல ஒரு சாதனத்தை கண்டுபிடித்தார். அதை தொடர்ந்து 10 மடங்கு உருப்பெருக்கும் தொலைநோக்கியை (Telescope) கண்டுபிடித்தார்.

🌷 இவர் தொலைநோக்கி மூலம் வெள்ளியின் வௌ;வேறு முகங்கள் மற்றும் வியாழனை நான்கு பெரிய நிலாக்கள் (இவரது புகழைச் சொல்லும் வகையில் கலீலியின் நிலவுகள் என்று அழைக்கப்படுகின்றன) சுற்றி வருவதாகவும் கண்டறிந்தார்.

🌷 மேலும் கலீலியோ மேம்படுத்தப்பட்ட இராணுவ திசைக்காட்டி உட்பட பல்வேறு கருவிகளை கண்டுபிடித்துள்ளார்.

🌷 கலீலியோவின் சூரியமையக் கொள்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இதன் விளைவாக 1632ஆம் ஆண்டு கலீலியோ வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டார்.

🌷 பிறகு தனது இருவகை முதன்மை உலக கண்ணோட்டம் சார்ந்த உரையாடல்கள் என்ற புத்தகத்தில் இவருடைய சூரியமைய கொள்கைக்கு நிறைய சான்றுகளை அளித்தார்.

🌷 கலீலியோ வீட்டுச்சிறையில் இருந்தபோது தான், தன் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றும், இறுதிப் படைப்புமான இரண்டு புதிய அறிவியல்கள் என்ற நூலை எழுதினார். அதில் இயங்கியல், பொருட்களின் வலிமை போன்ற துறைகளைப் பற்றிய ஆய்வுகளை தொகுத்து அளித்தார்.

🌷 'நோக்கு வானியலின் தந்தை', 'நவீன இயற்பியலின் தந்தை', 'நவீன அறிவியலின் தந்தை' என்று பலவாறாக பெருமையுடன் அழைக்கப்படும் இவர் தனது 77வது வயதில் (1642) மறைந்தார்.