👉 மார்க்கோனி பிறந்த தினம்
👉 புதுமைப்பித்தன் பிறந்த தினம்
🌷 1989ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி தன் வாழ்நாள் முழுவதும் தமிழுக்காகவே வாழ்ந்த வ.சுப.மாணிக்கம் மறைந்தார்.
🐝 உலக மலேரியா தினம் ஏப்ரல் 25ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் மலேரியா நோயினால் சுமார் 7 லட்சம் பேர் இறக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் 219 மில்லியன் மக்கள் மலேரியாவால் பாதிக்கப்படுகின்றனர்.
🐝 ஆகவே, இதனை கண்டறிந்து கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வை உலகம் முழுவதும் ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் உலக சுகாதார அமைப்பு 2007ஆம் ஆண்டிலிருந்து கடைபிடித்து வருகிறது.
🌷 நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடி புதுமைப்பித்தன் 1906ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரில் பிறந்தார். இவரின் இயற்பெயர் சொ.விருத்தாசலம்.
🌷 எழுத்துப் பணியில் 15 ஆண்டுகளுக்கும் குறைவாகவே இருந்த இவர் அதற்குள் 100க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 100க்கும் மேற்பட்ட கட்டுரைகள், 15 கவிதைகள், சில நாடகங்கள், எண்ணற்ற மொழிப்பெயர்ப்புகள், புத்தக விமர்சனங்கள் ஆகியவற்றை எழுதியுள்ளார்.
🌷 இவரின் சாகாவரம் பெற்ற அற்புதமான படைப்புகள் காஞ்சனை, நாசகாரக் கும்பல், மனித யந்திரம், பொன்ன கரம், இது மிஷின் யுகம், சாபவிமோசனம், கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும், ஒருநாள் கழிந்தது, சிற்பியின் நரகம், செல்லம்மாள் ஆகியவையாகும்.
🌷 இவர் சொ.வி., ரசமட்டம், மாத்ரு, கூத்தன், நந்தன், கபாலி, சுக்ராச்சாரி, இரவல் விசிறிமடிப்பு ஆகிய புனைப்பெயர்களில் கதைகளை எழுதியுள்ளார். தமிழ் இலக்கியத்தில் தனி முத்திரை பதித்த புதுமைப்பித்தன் தனது 42வது வயதில் (1948) மறைந்தார்.
📻 வானொலியின் தந்தை மற்றும் நோபல் பரிசு பெற்ற குக்லீல்மோ மார்க்கோனி 1874ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி இத்தாலியின் பொலொனா நகரில் பிறந்தார்.
📻 இவருக்கு இயற்பியலில் குறிப்பாக மின்சாரவியலில் ஆர்வம் பிறந்து, கம்பி இல்லாமல் ஒலி அலைகளை அனுப்புவது பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டார். ஒரே ஆண்டில் மின்காந்த அலைகள் மூலமாக சிக்னல்களை அனுப்பிக் காட்டினார்.
📻 1895ஆம் ஆண்டு திசை திரும்பும் மின்கம்பம் (Directional Antenna) என்ற கருவி மூலம் ஒன்றரை கி.மீ. தூரத்திற்கு செய்தியை அனுப்பினார். 1897ஆம் ஆண்டு இங்கிலாந்தில் மார்க்கோனி நிறுவனம் தொடங்கப்பட்டது.
📻 ஸ்டீசர் என்ற இடத்தில் வானொலி நிலையத்தை உருவாக்கினார். 1901ஆம் ஆண்டு 2100 கி.மீ. தொலைவுக்கு செய்தியை அனுப்பினார். இதன்மூலம் உலகப்புகழ் பெற்றார்.
📻 மார்க்கோனியின் வானொலி ஆய்வுகள் அங்கீகரிக்கப்பட்டு, கார்ல் பெர்டினாண்ட் பிரவுன் என்ற ஜெர்மானியருடன் இணைந்து மார்க்கோனிக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டது.
📻 மக்களுக்கு மிக நெருங்கிய பொழுதுபோக்கு சாதனத்தை வழங்கிய மார்க்கோனி தனது 63வது வயதில் (1937) மறைந்தார்.
Social Plugin