👉 வில்லியம் ஷேக்ஸ்பியர் பிறந்த தினம்
👉 சீனிவாச இராமானுஜன் நினைவு தினம்
🌷 1564ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் தேதி காலத்தால் அழியாமல் நிற்கும் ரோமியோ ஜூலியட்டை படைத்த வில்லியம் ஷேக்ஸ்பியர் லண்டனுக்கு அருகில் பிறந்தார்.
🌷 1897ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் தேதி தமிழறிஞர் மனோன்மணீயம் பெ.சுந்தரம் பிள்ளை மறைந்தார்.
🌷 1897ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் தேதி தமிழறிஞர் மனோன்மணீயம் பெ.சுந்தரம் பிள்ளை மறைந்தார்.
👉 உலக அறிவுசார் சொத்துரிமை தினம் ஏப்ரல் 26ஆம் தேதி 2001ஆம் ஆண்டுமுதல் கொண்டாடப்படுகிறது. மேலும், 1970ஆம் ஆண்டு இதே நாளில் அறிவுசார் சொத்துரிமை அமைப்பு உருவாக்கப்பட்டது.
👉 இத்தினம் மக்களின் அன்றாட வாழ்வில் அறிவுசார் சொத்துரிமையின் பங்கு பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலகளாவிய ரீதியில் கண்டுபிடிப்பாளர்கள், கலைஞர்கள் மற்றும் ஓவியர்கள் சமூகத்திற்கு அளிக்கும் பங்களிப்புகளை கௌரவிக்கவும் கொண்டாடப்படுகிறது.
🌷 ஆரியசமாஜத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான பண்டிட் குருதத்த வித்யார்த்தி (Gurudatta Vidyarthi) 1864ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் தேதி பாகிஸ்தானின் முல்தான் நகரில் பிறந்தார்.
🌷 லாகூரில் லாலா ஹன்ஸ்ராஜ், லாலா லஜபதி ராய் இவருடைய நெருங்கிய நண்பர்கள். இவர் அறிவியலில் நாட்டம் கொண்டிருந்ததால் அனைத்தையும் அறிவியல் அடிப்படையிலேயே அலசிப் பார்ப்பார்.
🌷 இவருக்கு இறைவன் குறித்த வலுவான சந்தேகம் இருந்து வந்தது. சுவாமி தயானந்த சரஸ்வதிக்கு பிரியமான சீடரானார். பெரும் பண்டிதராக போற்றப்பட்ட போதிலும், மிகுந்த அடக்கத்தோடு தன்னை 'வித்யார்த்தி' (மாணவன்) என்றே கூறிக்கொள்வார்.
🌷 இவரின் 'எ டெர்மினாலஜி ஆஃப் தி வேதாஸ்' என்ற ஆய்வுக் கட்டுரை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக சமஸ்கிருதப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டது.
🌷 அறிவைத் தேடுவதிலும், பரப்புவதிலும், சமூக சேவைகளிலும் ஈடுபட்டு, சமூக சிந்தனையாலும் மகத்தான பல சாதனைகளை நிகழ்த்திய பண்டிட் குருதத்த வித்யார்த்தி 26-வது வயதில் (1890) மறைந்தார்.
🌷 சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சியாமா சாஸ்திரி 1762ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் தேதி தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவாரூரில் பிறந்தார். இவரது இயற்பெயர் வெங்கடசுப்ரமணிய சர்மா என்பதாகும். சியாம கிருஷ்ணா என்ற செல்லப்பெயரே இசை உலகில் நிலைத்து விட்டது.
🌷 சங்கீத சாஸ்திர நுட்பங்களை நன்குணர்ந்த சியாமா சாஸ்திரிகள் இளமையிலேயே உருப்படிகளை இயற்ற ஆரம்பித்தார். முதலில் சமஸ்கிருதத்திலும் பின்னர் தெலுங்கிலும் ஸ்ருதிகளை இயற்றியுள்ளார்.
🌷 தெய்வப்புலமை பெற்ற வாக்கேயக்காரர் என எல்லோராலும் மதிக்கப்பட்ட இவர் 65வது வயதில் (1827) மறைந்தார்.
🌷 இந்திய கணித மேதை சீனிவாச இராமானுஜன் 1887ஆம் ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி தமிழ்நாட்டிலுள்ள ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார். இவருடைய பிறந்த நாள் தேசிய கணித தினமாக இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.
🌷 இவருடைய வாழ்வில் A Synopsis of Elementary Results in Pure and Applied Mathematics என்ற புத்தகம் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்த புத்தகமே இவருக்கு கணிதத்தில் இருந்த ஆர்வத்தை அதிகப்படுத்தியது.
🌷 இவர் தன்னுடைய 12வது வயதில் லோனி எழுதிய முக்கோணவியல் (Trigonometry) என்ற பாட புத்தகத்தை கல்லூரியில் இளங்கலை வகுப்பில் படித்துக் கொண்டிருந்த தன் பக்கத்து வீட்டு மாணவனிடமிருந்து கடன் வாங்கி படிக்கத் தொடங்கினார். அப்பாட புத்தகத்தை ஒரே வாசிப்பில் முடித்ததோடு மட்டுமல்லாமல் அதிலிருந்த எல்லா கணக்குகளையும் தானே போட்டு முடித்து விட்டார்.
🌷 இவர் மனதிலும், கையிலும் இருந்ததெல்லாம் விந்தைச் சதுரங்கள் (Magic Squares), தொடர் பின்னம் (Continued Fractions), பகா எண்களும் கலப்பு எண்களும் (Prime and Composite Numbers), எண் பிரிவினைகள் (Number Partitions), நீள்வட்டத் தொகையீடுகள் (Elliptic Integrals), மிகைப்பெருக்கத் தொடர் (hypergeometric series) மற்றும் உயர்தர கணிதப்பொருள்களுமாகும்.
🌷 ராமானுஜன் ஆய்வுகளில் தியரி ஆஃப் ஈகுவேசன்ஸ், தியரி ஆஃப் நம்பர்ஸ், டெஃபினிட் இன்ட்டக்ரல்ஸ், தியரி ஆஃப் பார்டிஷன்ஸ், எலிப்டிக் ஃபங்ஷன்ஸ் அண்ட் கண்டினியூடு ஃப்ராக்சன்ஸ் எனும் நிலைப்பாடுகள் மிகச் சிறந்தவைகளாகக் கருதப்படுகின்றன.
🌷 1914ஆம் ஆண்டுக்கும், 1918ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் இவர் 3000க்கும் அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களில் கண்டுபிடித்த உண்மைகள் இன்று இயற்பியல் துறை முதல் மின்தொடர்புப் பொறியியல் துறை வரை, பல துறை உயர்மட்டங்களில் அடிப்படையாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
🌷 உலகத்தை வியக்கச் செய்த ஒப்பற்ற பெரும் கணித மேதையாக திகழ்ந்த இவர் 1920ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் தேதி தனது 32வது வயதில் மறைந்தார்.
Social Plugin