👉 பிரபஞ்சன் பிறந்த தினம்
🌷 1945ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் தேதி தமிழ் எழுத்தாளர் மற்றும் விமர்சகருமான பிரபஞ்சன் புதுச்சேரியில் பிறந்தார்.
🌷 2000ஆம் ஆண்டிலிருந்து ஏப்ரல் மாதம் கடைசி சனிக்கிழமையை (ஏப்ரல் 27) உலக கால்நடை தினமாக கொண்டாடப்படுகிறது. உலக கால்நடை அமைப்பு 1863ஆம் ஆண்டில் டாக்டர் ஜிம் எட்வர்டு மற்றும் இவரின் மனைவி பாம் ஆகியோரின் முயற்சியால் ஆரம்பிக்கப்பட்டது. இந்த அமைப்பு சர்வதேச அளவில் விலங்குகளின் நலனில் அக்கறை கொண்டு செயல்படுகிறது.
🌷 ஒற்றைக்கம்பி தந்தி முறை மற்றும் மோர்ஸ் தந்திக் குறிப்பு ஆகியவற்றை கண்டுபிடித்த சாமுவெல் மோர்ஸ் 1791ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் தேதி அமெரிக்காவில் பிறந்தார்.
🌷 இவர் வரலாற்றுக் காட்சிகளை வரையும் ஓவியரும் ஆவார். இவரது மனைவியின் மரணமே, தந்தி முறையைக் கண்டுபிடிக்க காரணமாக இருந்தது. மேலும், மின்சாரம் மூலம் செய்தியை அனுப்ப முடியும் என்பதையும் நிரூபித்தார்.
🌷 1844ஆம் ஆண்டு மே 24, உலகின் முதல் தந்திச் செய்தியை வாஷிங்டன்.டிசி-லிருந்து பால்டிமோருக்கு அனுப்பி ஒரு புரட்சியை ஏற்படுத்தினார். தந்தி மூலம் மக்களின் சொந்த வாழ்விலும், பொது வாழ்விலும் புதிய மாற்றத்தை கொண்டு வந்த சாமுவெல் மோர்ஸ் 80வது வயதில் (1872) மறைந்தார்.
🌷 உபாத்தியாயர் என்றும், தமிழ்த் தாத்தா என்றும் அழைக்கப்பட்ட சிறந்த தமிழ் அறிஞர் கந்த முருகேசனார் 1902ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் தேதி இலங்கையின் வட மாகாணத்தில் உள்ள தென் புலோலியில் பிறந்தார்.
🌷 பல பள்ளிக்கூடங்களை திறந்து இங்கு தமிழ் மட்டுமன்றி சமயம், தர்க்கம், புவியியல், கணிதம் ஆகியவையும் கற்பிக்கப்பட்டன. தமிழில் மட்டுமல்லாது ஆங்கிலத்திலும் சிறந்து விளங்கிய இவரே அனைத்தையும் கற்பித்தார்.
🌷 தலைசிறந்த தமிழ்ப் புலவர், உபாத்தியாயர், தமிழ்த் தாத்தா, சீர்திருத்தவாதி, ஞானக்கடல் என்றெல்லாம் போற்றப்பட்ட கந்த முருகேசனார் 63வது வயதில் (1965) மறைந்தார்.
🌺 நீதிக்கட்சி நிறுவனர்களில் முக்கியமானவரும், சென்னை மாகாணத்தின் முக்கிய அரசியல் தலைவராக விளங்கியவருமான பி.தியாகராயர் 1852ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் தேதி சென்னை கொருக்குப்பேட்டையில் பிறந்தார்.
🌺 1882ஆம் ஆண்டு சென்னை உள்நாட்டினர் சங்கம் (சென்னை மகாஜன சபை) என்ற அமைப்பை தொடங்கினார். இந்த அமைப்பு சார்பில் நீதி என்ற இதழை நடத்தினார். இதன் பெயரைக் கொண்டே இந்த அமைப்பு நீதிக்கட்சி எனக் குறிப்பிடப்பட்டது.
🌺 இவரது தன்னலமற்ற முயற்சியால், 1921ஆம் ஆண்டு சென்னை மாநில சட்டப்பேரவை தேர்தலில் நீதிக்கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. முதல்வர் பதவி இவரைத் தேடி வந்தாலும் அதை மறுத்து வேறு ஒருவரை பொறுப்பேற்கச் செய்தார்.
🌺 சென்னையில் உள்ள நகருக்கு இவரது நினைவாக தியாகராய நகர் (தி.நகர்) என்று பெயர் சூட்டப்பட்டது. வெள்ளுடை வேந்தர் எனப் போற்றப்பட்ட சர் பிட்டி தியாகராய செட்டியார் 73வது வயதில் (1925) மறைந்தார்.
Social Plugin