Type Here to Get Search Results !

ஏப்ரல் 28

👉 உ.வே.சா நினைவு தினம்


🌷 1955ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி ஆட்டோமொபைல் துறையின் முன்னோடியான டி.வி.சுந்தரம் ஐயங்கார் மறைந்தார்.


வேலையின்போது பாதுகாப்புக்கும் நலத்துக்குமான உலக தினம்

🌷 வேலைத் தொடர்பான விபத்துக்கள், நோய்கள் ஆகியவற்றின் விளைவுகள் மற்றும் தொழில் சார்ந்த பாதுகாப்பு, நலம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவே ஐ.நா.சபை ஏப்ரல் 28ஆம் தேதி இத்தினத்தை அறிவித்தது.

🌷 அனைத்து நாடுகளிலும் தொழில் சார்ந்த பாதுகாப்பு, நலம் போன்றவற்றை மேம்படுத்துவது தொடர்பான முயற்சிகளுக்கு உதவுவதற்காக இத்தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.


ஜான் ஹென்ரிக் ஊர்ட்

🌌 சர்வதேச வானியல் அறிஞரும், பால்வெளி குறித்த புரிதலுக்கு மகத்தான பங்களிப்பை வழங்கியவருமான ஜான் ஹென்ரிக் ஊர்ட் (Jan Hendrik Oort) 1900ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி நெதர்லாந்தின் ஃபிநேகர் என்ற கிராமத்தில் பிறந்தார்.

🌌 உயர்-திசை வேகம் (high-velocity) கொண்ட நட்சத்திரங்களின் பண்புகளைக் குறித்த ஆய்வுக் கட்டுரையை எழுதி 1926ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றார். பால்வெளி ஒரு அசுரச் சக்கரம் போல சுழல்கிறது. அண்டவெளியில் நட்சத்திரக்கூட்டங்கள் தனித்தனியாக பயணிக்கின்றன. அண்டவெளி மையத்திற்கு நெருக்கமாக உள்ளவை, தொலைவில் உள்ளவற்றைவிட வேகமாக சுழல்கின்றன என்பதையெல்லாம் கண்டறிந்தார்.

🌌 இந்தக் கண்டுபிடிப்புகள் மூலம் உலகம் முழுவதும் உள்ள வானியலாளர்களிடையே மிகவும் பிரபலமடைந்தார். இவரும் இவரது சகாக்களும் இணைந்து மிகப்பெரிய ரேடியோ டெலஸ்கோப் ஒன்றை உருவாக்கினார்கள்.

🌌 அதைக்கொண்டு நட்சத்திரங்கள் ஒரு குழுவாகப் பால்வெளியை முதன்மை வட்டத்தின் வெளியே சுற்றி வருகின்றன என்றார். சூரியக் குடும்பத்தின் வட்டத்திலிருந்து வால் நட்சத்திரங்கள் வருவதை 1950ஆம் ஆண்டு கண்டறிந்து கூறினார்.

🌌 ஊர்த் சிறுகோள், ஊர்த் முகில், பால்வெளிக் கட்டமைப்பின் ஊர்த் மாறிலிகள் என பல வானியல் கண்டுபிடிப்புகளுக்கும் இவரது பெயர் சூட்டப்பட்டது. வானியலில் புரட்சியை ஏற்படுத்திய ஜான் ஹென்ரிக் ஊர்ட் 92வது வயதில் (1992) மறைந்தார்.


உ.வே.சாமிநாத ஐயர்

🌷 தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் 1855ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி கும்பகோணத்துக்கு அருகே உத்தமதானபுரம் என்ற சிற்றூரில் பிறந்தார்.

🌷 பழந்தமிழ் ஏடுகள் பழையனவாக இருந்ததால் அவற்றைப் புதுப்பிக்க வேண்டும் என்று அழிந்து மறைந்து போகும் நிலையில் இருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றை தேடித் தேடி அச்சிட்டு பதிப்பித்தார்.

🌷 இதன் மூலம் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் உலகறியச் செய்தார். அவற்றை அழிவிலிருந்து காத்ததோடு அடுத்தடுத்து வரும் தலைமுறையினருக்கும் தமிழின் பெருமையை உணர்த்தியுள்ளார்.

🌷 தமிழ் இலக்கியத்துக்காக இறுதிவரை பணியாற்றிய இவர் 87வது வயதில் 1942ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி மறைந்தார்.