Type Here to Get Search Results !

மே28

👉 உலக பட்டினி தினம்

👉 என்.டி.ராமராவ் பிறந்த தினம்

👉


🌷 1923ஆம் ஆண்டு மே 28ஆம் தேதி தமிழகத்தைச் சேர்ந்த கர்நாடக இசைக்கலைஞர் டி.எம்.தியாகராஜன் தஞ்சாவூரில் பிறந்தார்.


உலக பட்டினி தினம்

🍝 உலக பட்டினி தினம் ஆண்டுதோறும் மே 28ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. 'தனிஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என்று அப்போதே பாரதியார் பாடினார்.

🍝 ஆனால் உயிர்கொல்லி நோய்களால் ஆண்டுதோறும் இறப்போர் எண்ணிக்கையை காட்டிலும், பட்டினியால் ஏற்படும் மரணங்களே அதிகம் என ஐ.நா அறிக்கை வெளியிட்டுள்ளது.

🍝 மேலும் ஒருமனிதன் ஆரோக்கியத்துடன் இருக்க நாள்தோறும் 2,100 கலோரி உணவுகள் கிடைக்க வேண்டும் என்று கூறுகிறது. எனவே, பசி மற்றும் வறுமைக்கு நிலையான தீர்வுகளை கொண்டுவர வேண்டும் என்பதுதான் இத்தினத்தின் நோக்கமாகும்.


என்.டி.ராமராவ்

👤 என்.டி.ஆர். என்று அழைக்கப்படும் பிர‌ப‌ல‌ தெலுங்கு திரைப்பட நடிகர் மற்றும் ஆந்திர மாநில முன்னாள் முதல்வரான என்.டி.ராமராவ் 1923ஆம் ஆண்டு மே 28ஆம் தேதி ஆந்திர மாநிலம் நிம்மகுரு என்ற கிராமத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் நன்டமுரி தாரக ராமாராவ்.

👤 இவர் 1949-ல் மன தேசம் என்ற படத்தில் சிறு வேடத்தில் நடித்தார். 1951-ல் வெளிவந்த 'பாதாள பைரவி' திரைப்படம் இவருக்கு அபார வெற்றியை பெற்று தந்தது. 1968-ல் தேசிய விருதையும், பத்மஸ்ரீ விருதையும் வென்றுள்ளார்.

👤 பிறகு, திரையுலகிலிருந்து ஓய்வு பெற்று தீவிர அரசியலில் ஈடுபட்ட இவர் 1983-1995 ஆண்டுகளுக்கு இடையே மூன்று முறை ஆந்திர மாநில முதலமைச்சராகப் பதவி வகித்தார்.

👤 மக்களின் இதயத்தில் இன்றும் வாழ்ந்து வரும் என்.டி.ராமராவ் தனது 72வது வயதில் (1996) மறைந்தார்.


மைசூர் வாசுதேவாச்சாரியார்

🎼 சிறந்த சங்கீத வித்வானும், பல கீர்த்தனைகளை இயற்றியவருமான மைசூர் வாசுதேவாச்சாரியார் 1865ஆம் ஆண்டு மே 28ஆம் தேதி கர்நாடக மாநிலம் மைசூரில் பிறந்தார்.

🎼 இவரது இசைப்பயணம் 60 ஆண்டுகாலம் தொடர்ந்தது. பத்ம பூஷண், சங்கீத கலாநிதி விருது, மைசூர் ஆஸ்தான சங்கீத சாஸ்திர ரத்தினம், சங்கீத சாஸ்திர விஷாரத், சரஸகான சிரோன்மணி என பல விருதுகளைப் பெற்றார்.

🎼 தலைசிறந்த கர்நாடக இசை நட்சத்திரமான மைசூர் வாசுதேவாச்சாரியார் 95வது வயதில் (1961) மறைந்தார்.