Type Here to Get Search Results !

மே29

👉 சர்வதேச அமைதி காப்போர் தினம்

👉 உலக தம்பதியர் தினம்

👉 ஜான் எஃப் கென்னடி பிறந்த தினம்

👉 சரண் சிங் நினைவு தினம்


🌷 1630ஆம் ஆண்டு மே 29ஆம் தேதி இங்கிலாந்தின் இரண்டாம் சார்லஸ் பிறந்தார்.


சர்வதேச அமைதி காப்போர் தினம்

இரண்டாம் உலக மகாயுத்தம் முடிவடைந்த பின்பு யுத்தத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் கணக்கிட முடியாதவை. அதனால் மற்றொரு உலக மகாயுத்தம் ஏற்படாமல், உலக சமாதானத்தை நிலைநிறுத்துவதை அடிப்படையாக கொண்டே ஐக்கிய நாடுகள் அவை உருவாக்கம் பெற்றது.

சமாதானத்தை ஏற்படுத்தவும், நிவாரணங்களை ஒருங்கிணைக்கவும், அமைதி காப்பாளர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களை உரிய இடங்களில் ஐ.நா.சபை பணி அமர்த்தும் வேலைத்திட்டம் அமல்படுத்தப்பட்டது.

ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஆண், பெண் இருபாலரையும் கௌரவிக்கவும், சமாதானத்தில் உயிர் நீத்தவர்களை நினைவுக்கூறவும் இத்தினம் மே 29ஆம் தேதி 2001ஆம் ஆண்டிலிருந்து அனுசரிக்கப்படுகிறது.


உலக தம்பதியர் தினம்

உலகமே உறவுகளாலும், அன்பாலும் நிறைந்திருக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் உலக தம்பதியர் தினம் மே 29ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

உலகளவில், பல சம்பவங்களின் அடிப்படையில் மனித உறவுகளை மேம்படுத்த இத்தினம் கொண்டாடப்படுகிறது.


ஜான் எஃப் கென்னடி

உலகப் பெருந்தலைவர்களில் ஒருவராக விளங்கியவரும், அமெரிக்க முன்னாள் அதிபருமான ஜான் எஃப் கென்னடி (John F Kennedy) 1917ஆம் ஆண்டு மே 29ஆம் தேதி அமெரிக்காவில் மசாசுசெட்ஸ் மாநிலத்தில் ப்ரூக்ளின் என்ற நகரில் பிறந்தார்.

இரண்டாம் உலகப் போரின் போது இவர் அமெரிக்க கடற்படையில் அதிகாரியாக இருந்தார். அப்போது ஒரு வீரரைக் காப்பாற்றி சுமார் மூன்று மைல் தூரம் கடலில் இழுத்து வந்து கரை சேர்த்தார். இச்செயலுக்காக பர்பிள் ஹார்ட் என்ற வீரப்பதக்கம் வழங்கப்பட்டது.

போரின் முடிவில் இவர் அரசியலுக்கு திரும்பினார். இவர் எழுதிய Profiles in courage என்ற நூலுக்காக 1957-ல் புலிட்சர் பரிசு வழங்கப்பட்டது. 1960-ல் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று அமெரிக்காவின் 35வது அதிபராக பதவி ஏற்றார்.

உலக மக்கள் அனைவராலும் நேசிக்கப்பட்ட, மனித உரிமைக்காக குரல் கொடுத்த இவர் 1963-ல் தனது 46வது வயதில் சுட்டுக் கொல்லப்பட்டார்.



சரண் சிங்

🌷 இந்திய குடியரசின் முன்னாள் பிரதமர் திரு.சரண் சிங் 1902ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மீரட் மாவட்டத்தின் நூர்பூரில் பிறந்தார்.

🌷 சரண் சிங் சுதந்திர இயக்கத்தின் பகுதியாக அரசியலில் நுழைந்தார். சுதந்திரத்திற்கு பிறகு இவர் 1950ஆம் ஆண்டு, ஜவகர்லால் நேருவின் சோசலிச மற்றும் உழடடநஉவiஎளைவ நில பயன்பாடு கொள்கைகளுக்கு எதிரான போரில், நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்காக போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கதாக இருந்தது.

🌷 மேலும் இவர் வருவாய், மருத்துவம் மற்றும் பொது சுகாதாரம், நீதி, தகவல், வேளாண்மை ஆகிய பல துறைகளில் பணிபுரிந்துள்ளார். காங்கிரஸ் பிரிந்தபோது, காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் 1967ஆம் ஆண்டு முதல்முறையாக உத்திரப்பிரதேசத்தின் முதல்வராக பதவியேற்றார்.

🌷 எளிமையான வாழ்க்கையை வாழ்ந்த திரு.சௌத்ரி சரண் சிங் தனது ஓய்வு நேரத்தில் ஜமீன்தாரி முறை ஒழிப்பு, கூட்டுறவு பண்ணை முறை, இந்தியாவில் வறுமை ஒழிப்பும் அதற்கான தீர்வும், வேலை செய்பவர்களுக்கு நிலம் உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார்.

🌷 லட்சக்கணக்கான விவசாயிகள் மத்தியில் பெரும் நம்பிக்கையை உருவாக்கிய சரண்சிங் 1987ஆம் ஆண்டு மே 29ஆம் தேதி தனது 84வது வயதில் மறைந்தார்.