👉 ப்ராக் கோராக்புரி பிறந்த தினம்
🌷 1922ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி உலகில் முதல் முறையாக வானொலியில் வர்த்தக ஒலிபரப்பு அமெரிக்காவில் ஆரம்பமானது.
🌷 1789ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி வில்லியம் ஹேர்ச்செல், சனி கோளின் புதிய சந்திரனைக் கண்டுபிடித்தார்.
🌊 1609ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி ஹென்ரி ஹட்சன், டெலவர் வளைகுடா பகுதியை கண்டுபிடித்தார்.
📰 1845ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி சயின்டிபிக் அமெரிக்கன் என்ற இதழின் முதல் பதிப்பு வெளியானது.
🌷 1789ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி வில்லியம் ஹேர்ச்செல், சனி கோளின் புதிய சந்திரனைக் கண்டுபிடித்தார்.
🌊 1609ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி ஹென்ரி ஹட்சன், டெலவர் வளைகுடா பகுதியை கண்டுபிடித்தார்.
📰 1845ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி சயின்டிபிக் அமெரிக்கன் என்ற இதழின் முதல் பதிப்பு வெளியானது.
🏁 தாழ்த்தப்பட்டோருக்கு மறுக்கப்பட்டிருந்த உரிமைகளை பெற்றுத் தந்த கேரளப் போராளி அய்யன்காளி 1863ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி திருவிதாங்கூருக்கு உட்பட்ட பெருங்காட்டுவிளா என்ற ஊரில் பிறந்தார்.
🏁 இவர் ஓய்வு இல்லாத கட்டாய உழைப்பு முறையை ஒழித்துக்கட்டும் போராட்டத்தை 1904-ல் தொடங்கினார். கேரளாவில் முதல் முறையாக நடந்த இந்த விவசாயத் தொழிலாளர் போராட்டம் வெற்றி பெற்று, 'ஞாயிற்றுக்கிழமை ஓய்வு' உள்ளிட்ட பல உரிமைகளை தொழிலாளர்களுக்குப் பெற்றுத் தந்தது.
🏁 சாதி பேதமின்றி எல்லா குழந்தைகளுக்கும் இலவசக் கல்வி அளிக்கும், தென்னிந்தியாவின் முதல் அரசுப் பள்ளிக்கூடம் இவரது முனைப்பால் தொடங்கப்பட்டது. இவர் கல்வி, அரசு வேலைவாய்ப்பு, நிலம், சமூக மரியாதை, கோவில்களில் வழிபாட்டு உரிமை ஆகியவற்றுக்காகவும் ஏராளமான போராட்டங்களை முன்னின்று நடத்தி வெற்றி பெற்றார்.
🏁 காந்தியடிகள் 1937-ல் வெங்கனூர் சென்று இவரை சந்தித்து, இவரது தொண்டுகளைப் பாராட்டி ஆசி வழங்கினார். தாகூர், சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்ட பல தலைவர்களுடன் கடிதத் தொடர்பு கொண்டிருந்தார்.
🏁 தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பல உரிமைகளைப் பெற்றுத்தந்த போராளியான அய்யன்காளி தனது 78-வது வயதில் (1941) மறைந்தார்.
🌷 இந்திய எழுத்தாளர், கவிஞர், விமர்சகரான ப்ராக் கோராக்புரி 1896ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி கோரக்பூரில் பிறந்தார்.
🌷 இவர் மாகாண சிவில் சேவை (P.C.S.) மற்றும் இந்திய சிவில் சேவையில் (I.C.S.) தேர்வு செய்யப்பட்டார். ஆனால் மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தை பின்பற்றுவதற்காக அதை ராஜினாமா செய்தார்.
🌷 இவர் இந்தியாவின் மிக உயர்ந்த விருதான இலக்கிய விருது, ஞானபீட விருது மற்றும் 1960-ல் சாகித்திய அகாடமி விருதை பெற்றுள்ளார். இவர் 1982ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் தேதி புது தில்லியில் இறந்தார்.
Social Plugin