👉 வில்பர் ரைட் நினைவு தினம்
🌷 1987ஆம் ஆண்டு மே 30ஆம் தேதி கோவா இந்தியாவின் 25வது மாநிலமாகியது.
🌷 1971ஆம் ஆண்டு மே 30ஆம் தேதி, செவ்வாய்க்கோளின் 70 சதவீத பரப்பளவை கண்டறியவும் மற்றும் அதன் வளிமண்டலத்தை ஆராயவும் மரைனர் 9 (Mariner 9) விண்கலம் ஏவப்பட்டது.
🌷 1971ஆம் ஆண்டு மே 30ஆம் தேதி, செவ்வாய்க்கோளின் 70 சதவீத பரப்பளவை கண்டறியவும் மற்றும் அதன் வளிமண்டலத்தை ஆராயவும் மரைனர் 9 (Mariner 9) விண்கலம் ஏவப்பட்டது.
🌷 நவீன தமிழ் இலக்கியத்தின் தலைசிறந்த எழுத்தாளர் சுந்தர ராமசாமி (Sundara Ramaswamy) 1931ஆம் ஆண்டு மே 30ஆம் தேதி நாகர்கோவில் அருகே உள்ள மகாதேவர் கோவில் என்ற கிராமத்தில் பிறந்தார்.
🌷 இவரது ஆரம்பக்கால கதைகள் சாந்தி என்ற இதழில் வெளிவந்தன. தகழி சிவசங்கரப் பிள்ளையின் தோட்டியின் மகன் என்ற மலையாள நாவலை தமிழில் மொழிபெயர்த்தார். பிறகு அவருடைய செம்மீன் நாவலையும் மொழிபெயர்த்தார்.
🌷 இவர் பசுவய்யா(Pasuvayya) என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதினார். 1988-ல் காலச்சுவடு என்ற காலாண்டு இதழைத் தொடங்கினார். தற்போது இது மாத இதழாக வெளிவருகிறது. குமரன் ஆசான் நினைவு விருது, இயல் விருது, கதா சூடாமணி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
🌷 நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், கவிஞர், விமர்சகர் என பன்முகப் பரிமாணம் கொண்ட சுந்தர ராமசாமி தனது 74வது வயதில் (2005) மறைந்தார்.
✈ உலகிலேயே விண்வெளியில் நடந்த முதல் மனிதரான அலெக்ஸி லியோனோவ் (Alexey Leonov) 1934ஆம் ஆண்டு மே 30ஆம் தேதி லிஸ்த்வியன்கா (Listvyanka) (சோவியத் ஒன்றியம்) என்ற ஊரில் பிறந்தார்.
✈ 1960-ல் விண்வெளி வீரர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட ரஷ்ய விமானப் படையைச் சேர்ந்த 20 பைலட்டுகளில் இவரும் ஒருவர். இவரும், பவெல் பெல்யயேவ் (Pavel Belyayev) என்ற பைலட்டும் வோஸ்நாட்-2 என்ற விண்கலத்தில் பயணம் செய்தனர்.
✈ 1965, மார்ச் 18-ம் தேதி அலெக்ஸி விண்வெளியில் 12 நிமிடங்கள் 9 நொடிகள் நடந்தார். இது மனித வரலாற்றின் மகத்தான சாதனைகளில் ஒன்றாகும்.
✈ சோவியத் நாட்டின் ஹீரோ விருதை இரண்டு முறையும், லெனின் விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளையும், பட்டங்களையும் வென்றுள்ளார்.
✈ தற்போது 84வது வயதைக் கடந்துவிட்டபோதும் இன்றும் அதே மிடுக்குடன் தனது பதக்கங்களை அணிந்தவாறுதான் காணப்படுகிறார்.
🌷 1912ஆம் ஆண்டு மே 30ஆம் தேதி விமானத்தை கண்டுபிடித்த ரைட் சகோதரர்களுள் ஒருவரான வில்பர் ரைட் மறைந்தார்.
Social Plugin