🌷 1973ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி உலகின் முதலாவது நகர்பேசி அழைப்பு நியூயார்க் நகரில் மேற்கொள்ளப்பட்டது.
🌷 1981ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி எளிதில் தூக்கிச் செல்லக்கூடிய உலகின் முதலாவது கணினி 'ஒஸ்போர்ன் 1' (Osborne 1) சான்பிரான்சிஸ்கோவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
🌷 1981ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி எளிதில் தூக்கிச் செல்லக்கூடிய உலகின் முதலாவது கணினி 'ஒஸ்போர்ன் 1' (Osborne 1) சான்பிரான்சிஸ்கோவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
👮 இந்திய ராணுவ வரலாற்றில் சாதனை படைத்த 'பீல்டு மார்ஷல்' சாம் மானெக்ஷா (Sam Manekshaw) 1914ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்த சரஸில் பிறந்தார். இவரது முழுப்பெயர் சாம் ஹோர்மூஸ்ஜி பிரேம்ஜி ஜம்ஷெட்ஜி மானெக்ஷா ஆகும்.
👮 இவர் 1934ஆம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்தார். 2-ம் உலகப் போரின் போது (1942) ஜப்பானின் தாக்குதல்களை எதிர்கொண்டு போராடிய இவரது உடலில் 9 குண்டுகள் பாய்ந்தன.
👮 படுகாயம் அடைந்தபோதும் தொடர்ந்து போராடி வெற்றிகண்டார். இவரை பாராட்டி பிரிட்டிஷ் இந்திய ராணுவத் தளபதி டி.டீ.கோவன், தனது மிலிட்டரி கிராஸ் பதக்கத்தை கழற்றி அங்கேயே அணிவித்தார்.
👮 பிறகு பணியாளர் கல்லூரிக்கு பயிற்சியாளராக அனுப்பப்பட்டார். வீரர்கள் இவரை 'சாம் பகதூர்' (துணிச்சல்காரர்) என்றனர். இந்தியப் பிரிவினைக்குப் பிறகு 1948ஆம் ஆண்டு காஷ்மீரில் ஊடுருவிய பாகிஸ்தான் ராணுவத்தை தனது அசாதாரணமான போர்த் திறனால் தோற்கடித்தார்.
👮 1962ஆம் ஆண்டு சீனப் போரில் இந்தியா பின்வாங்கியபோது படைப்பிரிவுக்கு இவரை தலைமை ஏற்கச் சொன்னார் நேரு. சீனப் படை மேலும் முன்னேறுவதை இவர் வெற்றிகரமாகத் தடுத்தார்.
👮 1969ஆம் ஆண்டு இந்தியாவின் ராணுவத் தலைமை தளபதியானார். இவருக்கு 1968ஆம் ஆண்டு பத்ம பூஷண், 1972ஆம் ஆண்டு பத்ம விபூஷண், 1973ஆம் ஆண்டு பீல்டு மார்ஷல் பட்டம் வழங்கப்பட்டது.
👮 40 ஆண்டு கால ராணுவ வாழ்க்கையில் கர்னல், பிரிகேடியர், மேஜர் ஜெனரல், லெப்டினன்ட் ஜெனரல் என படிப்படியாக பல ரேங்க் பெற்ற சாம் மானெக்ஷா தனது 94வது வயதில் (2008) மறைந்தார்.
🌷 வீரமிக்க மாமன்னன் சத்ரபதி சிவாஜி 1627ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்திலுள்ள சிவநேரி கோட்டை என்ற இடத்தில் பிறந்தார்.
🌷 தென்னிந்திய வரலாற்றில் பொற்காலம் என கருதப்படும் இவருடைய ஆட்சிக் காலத்தில், சிறப்பான நிர்வாக கட்டமைப்பினையும், வலுவான படை அமைப்பினையும் கொண்டு சிறந்த ஆட்சியாளராகவும் விளங்கினார்.
🌷 வீரத்தையும், போர்த்திறமையையும், கலையுணர்வையும் இன்றளவும் பறைசாற்றி கொண்டிருக்கும் சத்ரபதி சிவாஜி தனது 53வது வயதில் 1680ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி மறைந்தார்.
Social Plugin