Type Here to Get Search Results !

ஏப்ரல்4

👉 மனோன்மணீயம் பெ.சுந்தரம் பிள்ளை பிறந்த தினம்

👉 மார்ட்டின் லூதர் நினைவு தினம்


🌷 1929ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி முதன்முதலில் எரிபொருளில் இயங்கும் நான்குசக்கர வாகனத்தை (கார்) தயாரித்த கார்ல் பென்ஸ் மறைந்தார்.

🌷 1973ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி உலக வர்த்தக மையம் நியூயார்க் நகரில் நிறுவப்பட்டது.

🌷 1975ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி மைக்ரோசாப்ட் நிறுவனம் தொடங்கப்பட்டது.


நிலக்கண்ணிகள் குறித்த சர்வதேச விழிப்புணர்வு தினம்

🌷 நிலக்கண்ணிகள் நிலத்தில் ஒரு சில சென்டிமீட்டர் ஆழத்திலோ அல்லது நிலத்தின் மேலோ வைக்கப்படும் வெடிபொருட்களாகும். பெரும்பாலும் நாட்டின் எல்லைப்புறங்களிலும், யுத்தம் நடைபெறும் இடங்களிலும் வைக்கப்படுகின்றன.

🌷 நிலக்கண்ணிகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளவும், இதன் உற்பத்தி, விற்பனை, விநியோகம் ஆகியவற்றை தடுத்திடவும், இதனால் பாதிக்கப்பட்டவரின் உரிமையை எடுத்துக்கூறவும் இத்தினம் ஏப்ரல் 4ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.


பெ.சுந்தரம் பிள்ளை

🌷 நீராருங் கடலுடுத்த எனத் தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதிய மனோன்மணீயம் பெ.சுந்தரம் பிள்ளை 1855ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி கேரள மாநிலம் ஆலப்புழையில் பிறந்தார்.

🌷 இவர் மனோன்மணீயம் என்ற நூலை 1891ஆம் ஆண்டு எழுதினார். அதில் இடம்பெற்ற நீராருங் கடலுடுத்த எனத் தொடங்கும் பாடலை தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக தமிழக அரசு 1970ஆம் ஆண்டு அறிவித்தது.

🌷 பத்துப்பாட்டின் 3 அங்கங்களான திருமுருகாற்றுப்படை, நெடுநல் வாடை, மதுரைக் காஞ்சி ஆகியவற்றை தி டென் தமிழ் ஐடியல்ஸ் என்ற நூலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

🌷 இவர் F.M.U., F.R.H, S.M.R.A.S, ராவ்பகதூர் போன்ற பல பட்டங்களை பெற்றுள்ளார். பல களங்களில் மகத்தான பங்களிப்பை வழங்கியவரும், சிறந்த தமிழ் அறிஞருமான பெ.சுந்தரம் பிள்ளை தனது 42வது வயதில் (1897) மறைந்தார்.


மாகன்லால் சதுர்வேதி

🏁 விடுதலை போராட்ட வீரான பண்டிட் மாகன்லால் சதுர்வேதி (Pandit Makhanlal Chaturvedi) 1889ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி மத்திய பிரதேச மாநிலத்தில் பிறந்தார்.

🏁 திலகர், காந்தி ஆகியோரின் முழக்கங்கள் இவருக்குள் விடுதலை வேட்கையை தூண்டியது. இவர் ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றார்.

🏁 இவர் 1943ஆம் ஆண்டு ஹிம கிரீடினி படைப்புக்காக தேவ் புரஸ்கார் விருது பெற்றார். 1955ஆம் ஆண்டு இவரது ஹிம தரங்கிணி கவிதைத் தொகுப்பு இந்தி மொழிக்கான முதல் சாகித்ய அகாடமி விருதை வென்றது.

🏁 இந்தி இலக்கிய ஆர்வலர்களால் பண்டிட்ஜி என்று அன்போடு அழைக்கப்பட மாகன்லால் சதுர்வேதி தனது 78வது வயதில் (1968) மறைந்தார்.

🏁 இவரை நினைவுக்கூறும் விதமாக மாகன்லால் சதுர்வேதி புரஸ்கார் என்ற விருதை சிறந்த கவிஞர்களுக்கு மத்தியப் பிரதேச அரசு 1987ஆம் ஆண்டு முதல் வழங்கி வருகிறது.


மார்ட்டின் லூதர் கிங்

🌷 அமெரிக்காவில் அடிமை முறையையும், நிற வேறுபாட்டையும் ஒழிக்க முதன் முதலாகக் குரல் கொடுத்த மார்ட்டின் லூதர் கிங் 1929ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி அமெரிக்காவில் அட்லாண்டா நகரில் பிறந்தார்.

🌷 இவர் காந்திய வழியில் வன்முறையற்ற அறப்போராட்டங்களை நடத்தியதால், அமெரிக்க முற்போக்கு வரலாற்றில் ஒரு தேசிய சின்னமாகக் கருதப்படுகிறார். 1964ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு மார்டின் லூதர் கிங்குக்கு வழங்கப்பட்டது.

🌷 உலகம் முழுவதும் புகழ்பெற்ற மார்டின் லூதர் கிங் தன்னுடைய 39வது வயதில் 1968ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி மறைந்தார்.