Type Here to Get Search Results !

ஏப்ரல் 5

👉 தேசிய கடல்சார் தினம்


🌷 1782ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதி அமெரிக்க அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன் முதல்முறையாக வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தினார்.

🌷 1957ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதி விடுதலை அடைந்த நேரத்தில் தமிழ்நாட்டின் உயர்கல்வி வளர்ச்சிக்காக பல கல்விச்சாலைகளை நிறுவிய ராம.அழகப்பச் செட்டியார் மறைந்தார்.


தேசிய கடல்சார் தினம்

🌷 இந்தியாவில் ஆண்டுதோறும் ஏப்ரல் 5ஆம் தேதி தேசிய கடல்சார் தினம் கடைபிடிக்கப்படுகிறது. கப்பல் துறையின் மகத்தான பணிகளை சமூகத்திற்கு வெளிப்படுத்தவே இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

🌷 இந்தியாவின் முதல் நீராவிக் கப்பல் (எஸ்.எஸ்.லாயல்டி) 1919ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 5ஆம் தேதி மும்பையிலிருந்து லண்டனுக்குச் சென்றது. அதனை நினைவுக்கூறும் வகையில் 1964ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதி முதல்முறையாக தேசிய கடல்சார் தினம் கொண்டாடப்பட்டது.


ஜோசப் லிஸ்டர்

💉 அறுவை சிகிச்சையின் தந்தை, ஜோசப் லிஸ்டர் 1827ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதி இங்கிலாந்தின் அப்டான் கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை நவீன உருப்பெருக்கியை உருவாக்கிய ஜோசப் ஜாக்சன் லிஸ்டர் ஆவார்.

💉 இவர் லூயிஸ் பாஸ்டர் எழுதிய நோய்களை உண்டாக்கும் பாக்டீரியாக்கள் பற்றிய கட்டுரையை படித்தார். அதில் பொருட்களை புளிக்கச் செய்யும் கிருமிகள் காற்றில் உள்ளன. அதனால்தான் காயங்களில் விஷம் பரவுகிறது என்பதை அறிந்தார்.

💉 அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தும் கருவிகளைக் கொதிக்க வைப்பதன் மூலம் நுண்கிருமிகளை அழிக்க முடியும் என ஆய்வு செய்து கண்டறிந்தார்.

💉 தற்போது பினாயில் என்றழைக்கப்படும் கார்பாலிக் அமிலத்தால் கருவிகளை சுத்திகரிக்க முடியும் என்பதை அறிந்தார். இவர் ஆன்டிசெப்டிக் அறுவை சிகிச்சை முறையை உருவாக்கினார்.

💉 மருத்துவ உலகிலேயே முதன்முதலாக இவருக்கு ஆர்டர் ஆஃப் மெரிட் விருது வழங்கப்பட்டது. இவர் ஏராளமான பட்டங்கள், பதக்கங்கள், விருதுகளையும் பெற்றார்.

💉 அறுவை சிகிச்சையின் முன்னோடி எனப் போற்றப்படும் ஜோசப் லிஸ்டர் தனது 84வது வயதில் (1912) மறைந்தார்.


ஜெகசீவன்ராம்

🌷 இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், சமூகச் சீர்திருத்தவாதியுமான ஜெகசீவன்ராம் 1908ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதி பீகார் மாநிலம், போஜ்பூர் மாவட்டம், சந்த்வா கிராமத்தில் பிறந்தார்.

🌷 தீண்டத்தகாத சாதியில் பிறந்ததால் அவருக்குத் தனியாகக் குடிநீர்ப் பானை பள்ளியில் வைக்கப்பட்டது. இதை சாதி வேறுபாடுகள் இல்லாமல் பயன்படுத்த வேண்டும் என்று போராடினார். இறுதியில் வெற்றி பெற்றார்.

🌷 இவர் நாடாளுமன்ற உறுப்பினர், நடுவணரசு அமைச்சர், துணைப் பிரதமர் எனப் பல நிலைகளில் இந்திய அரசியல் அரங்கில் விளங்கியவர். 1946ஆம் ஆண்டில் ஜவகர்லால் நேருவின் தலைமையிலான இடைக்கால அரசில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தவர்.

🌷 பாபு என அன்பாக அழைக்கப்படும் இவர் தன்னுடைய 78வது வயதில் (1986) மறைந்தார்.