👉 மீனாட்சிசுந்தரம் பிள்ளை பிறந்த தினம்
👉 கோ. நம்மாழ்வார் பிறந்த தினம்
🌷 1938ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி தமிழ்நாட்டின் முதன்மை இயற்கை ஆர்வலர் கோ. நம்மாழ்வார் பிறந்தார்.
🏆 1947ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி திரையுலக சாதனைக்காக டோனி விருதுகள் முதன்முதலில் வழங்கப்பட்டது.
🏀 1896ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி 1500 ஆண்டுகளாக தடை செய்யப்பட்டிருந்த ஒலிம்பிக் போட்டிகள் முதன்முறையாக கிரேக்கத்தின் ஏதென்ஸ் நகரில் ஆரம்பமாயின.
🏆 1947ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி திரையுலக சாதனைக்காக டோனி விருதுகள் முதன்முதலில் வழங்கப்பட்டது.
🏀 1896ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி 1500 ஆண்டுகளாக தடை செய்யப்பட்டிருந்த ஒலிம்பிக் போட்டிகள் முதன்முறையாக கிரேக்கத்தின் ஏதென்ஸ் நகரில் ஆரம்பமாயின.
🏆 விளையாட்டின் மூலம் உலகம் முழுவதும் ஒற்றுமையை ஏற்படுத்த இத்தினம் ஏப்ரல் 6ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
🏆 விளையாட்டு என்பது கல்விக்கான ஒரு கருவியாகும். இது வளர்ச்சி, அமைதி, சமாதானம், ஒற்றுமை, ஒத்துழைப்பு, புரிதல் ஆகியவற்றை உள்ளூர், நாடு மற்றும் சர்வதேச அளவில் மேம்படுத்த உதவுகிறது.
🌷 மகாவித்வான் என்று போற்றப்பட்ட மீனாட்சிசுந்தரம் பிள்ளை 1815ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி திருச்சியில் பிறந்தார்.
🌷 இவர் சிற்றிலக்கியங்கள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்து, பல இலக்கியங்களைப் படைக்க தொடங்கினார். பிள்ளைத்தமிழ் நூல்களைப் பாடியதால் பிள்ளைத்தமிழ் மீனாட்சி சுந்தரம் பிள்ளை என்று புகழப்பட்டார்.
🌷 இவர் ஏராளமான தல புராணங்களை பாடியுள்ளார். இவரிடம் பயின்றவர்களில் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர், குலாம் காதர், நாவலர், சவுரிராயலு நாயக்கர் குறிப்பிடத்தக்கவர்கள்.
🌷 மாயூரம் வேத நாயகம் பிள்ளையை பாராட்டி குளத்துக்கோவை என்னும் நூலை இயற்றினார். திருவாவடுதுறை ஆதீனத் தலைவர் அம்பலவாண தேசிகர் இவருக்கு மகாவித்வான் என்ற பட்டத்தை அளித்துச் சிறப்பித்தார்.
🌷 19ம் நூற்றாண்டில் தமிழில் அதிக நூல்களை இயற்றிய தமிழ் அறிஞர் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை தனது 60வது வயதில் (1876) மறைந்தார்.
🌷 விடுதலை அடைந்த நேரத்தில் தமிழ்நாட்டின் உயர்கல்வி வளர்ச்சிக்காக பல கல்விச்சாலைகளை நிறுவிய டாக்டர் அழகப்பச் செட்டியார் 1909ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் கோட்டையூரில் பிறந்தார்.
🌷 இவர் மலேசியா, பர்மா, கேரளா, கல்கத்தா, பம்பாய், சென்னை உள்ளிட்ட இடங்களில் தேயிலைத் தோட்டங்கள், ஈயச் சுரங்கங்கள், துணி ஆலைகள், ஆயுள் காப்பீடு நிறுவனம், உணவு விடுதிகள், திரையரங்குகள், விமானப் போக்குவரத்து நிறுவனம் என அனைத்து களங்களிலும் முத்திரை பதித்தார்.
🌷 மேலும் இவர் தேசிய ஆராய்ச்சி நிறுவனம் தொடங்குவதற்கு காரைக்குடியில் நிலத்தை நன்கொடையாக வழங்கியதால் இவரை சோஷலிச முதலாளி எனப் புகழ்ந்தார் நேரு. இவரது முனைப்பால் தான் அழகப்பா பல்கலைக்கழகமாக தழைத்தோங்கியுள்ளது. 1956-ல் பத்மபூஷண் விருது பெற்றார்.
🌷 வெற்றிகரமான தொழிலதிபரும், கல்வி வளர்ச்சிக்காக வாரி வழங்கிய வள்ளலுமான அழகப்பச் செட்டியார் 48-வது வயதில் (1957) மறைந்தார்.
Social Plugin