👉 பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு தினம்
🌷 1971ஆம் ஆண்டு அக்டோபர் 8ஆம் தேதி தமிழக எழுத்தாளர் பா.ராகவன் பிறந்தார்.
🌷 இந்தியாவின் முப்படைகளுள் ஒன்றான விமானப்படை, 1932ஆம் ஆண்டு அக்டோபர் 8ம் தேதி உருவாக்கப்பட்டது. இதனை நினைவுப்படுத்தும் விதமாகவும், விமானப்படையினரின் தியாகங்களை போற்றும் விதமாகவும் அக்டோபர் 8ஆம் தேதி, இந்திய விமானப்படை தினமாக கொண்டாடப்படுகிறது.
🌷 1947ல் சுதந்திரம் பெற்றபின் இந்தியா 4 முறை பாகிஸ்தானுடனும், ஒரு முறை சீனாவுடனும் போரில் ஈடுபட்டது. இதில் விமானப்படையின் பங்கு மகத்தானது. இந்திய விமானப்படையில் 1500க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் உள்ளன.
🌷 விமானப்படை, பைட்டர்ஸ், டிரெய்னர்ஸ், டிரான்ஸ்போர்ட்ஸ், ஹெலிகாப்டர், மைக்ரோலைட்ஸ், அல்ட்ராலைட்ஸ் கிளைடர்ஸ் போன்ற பிரிவுகளாக செயல்படுகிறது. உலகில் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்திய விமானப்படை 4வது இடத்தில் பெரியதாக திகழ்கிறது.
🌷 இருபதாம் நூற்றாண்டின் இந்திய அறிவியலாளர்களுள் முக்கியமானவரும், இயற்பியல் விஞ்ஞானியுமான ஜி.என்.ராமச்சந்திரன் 1922ஆம் ஆண்டு அக்டோபர் 8ஆம் தேதி கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் பிறந்தார்.
🌷 1952-ல் சென்னை பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறை தலைவராக நியமிக்கப்பட்டார். இயற்பியல் துறையின் கீழ் கிரிஸ்டலோகிராஃபி மற்றும் பயோபிசிக்ஸ் என்ற புதிய துறையை நவீன ஆய்வு வசதிகளுடன் சர்வதேசத் தரத்துடன் உருவாக்கினார். இது நாட்டின் தலைசிறந்த ஆய்வுநிலையங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
🌷 Triple-Helical Model for the Structure of Collagen என்ற இவரது கண்டுபிடிப்பு புரதக்கூறுகளின் வடிவமைப்பின் அடிப்படைகளை அறிந்துக்கொள்ள உதவியது.
🌷 இந்திய இயற்பியல் துறையின் சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது, லண்டன் ராயல் சொசைட்டியின் ஃபெலோ ஆஃப் விருது, கிரிஸ்டலோகிராஃபி துறையில் இவர் ஆற்றிய பணிக்காக இவால்டு (Ewald) விருது போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார். அனைவராலும் விரும்பப்படும் மரியாதைக்குரிய விஞ்ஞானியாகத் திகழ்ந்த ஜி.என்.ராமச்சந்திரன் 2001ஆம் ஆண்டு தனது 78வது வயதில் மறைந்தார்.
🌷 1959ஆம் ஆண்டு அக்டோபர் 8ஆம் தேதி கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மறைந்தார்.
Social Plugin