Type Here to Get Search Results !

மே 7

👉 உலக ஆஸ்துமா தினம்

👉 இரவீந்திரநாத் தாகூர் பிறந்த தினம்


📻 1895ஆம் ஆண்டு மே 7ஆம் தேதி ரஷ்ய அறிவியலாளர் அலெக்சாண்டர் பப்போவ் உலகின் முதலாவது வானொலிக் கருவியை சென் பீட்டர்ஸ்பேர்க்கில் அறிமுகப்படுத்தினார். இந்நாள் ரஷ்யாவில் வானொலி தினமாக கொண்டாடப்படுகிறது.

🌷 1952ஆம் ஆண்டு மே 7ஆம் தேதி ஒருங்கிணைந்த மின்சுற்று (integrated circuit) தத்துவம் ஜெப்ரி டம்மர் என்பவரால் வெளியிடப்பட்டது.


உலக ஆஸ்துமா தினம்

👥 உலக ஆஸ்துமா தினம் மே மாதத்தில் வரும் முதல் செவ்வாய்க்கிழமை (மே 7) அனுசரிக்கப்படுகிறது.

👥 ஒருவருக்கு தொடர்ந்து சளி பிடித்தால் அவர்களுக்கு 50 முதல் 70 சதவீதம் வரை ஆஸ்துமா வர வாய்ப்புள்ளது. மேலும் இந்த நோயினால் உலகம் முழுவதும் 30 கோடி பேர் பாதிப்படைந்துள்ளனர்.

👥 சிகரெட் புகை, காற்று மாசுபாடு, பாஸ்ட்புட், வாசனை திரவியம் பூசுதல் போன்ற காரணங்களால் ஆஸ்துமா நோய் ஏற்படுகிறது. ஆஸ்துமா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இத்தினம் 1998ஆம் ஆண்டுமுதல் கடைபிடிக்கப்படுகிறது.


இரவீந்திரநாத் தாகூர்

🎼 இந்திய தேசிய கீதத்தை இயற்றிய இரவீந்திரநாத் தாகூர் (Rabindranath Tagore) 1861ஆம் ஆண்டு மே 7ஆம் தேதி கல்கத்தாவில் பிறந்தார்.

🎼 இவர் 16வது வயதில் பானுசிங்கோ என்ற புனைப் பெயரில் முதல் கவிதையை வெளியிட்டார். 2000க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். அவற்றில் ஒரு பாடல் இந்திய தேசிய கீதமாகவும் மற்றொரு பாடல் வங்க தேசத்தின் தேசிய கீதமாகவும் பாடப்பட்டு வருகிறது.

🎼 இவருடைய கீதாஞ்சலி என்ற கவிதைத் தொகுப்புக்காக இவருக்கு 1913ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

🎼 ஆங்கிலேய அரசு 1915ஆம் ஆண்டு இவருக்கு சர் பட்டம் வழங்கியது. 1919ஆம் ஆண்டு அமிர்தசரசில் நடைபெற்ற ஜாலியன்வாலாபாக் படுகொலையால் மனம் உடைந்து சர் பட்டத்தை திருப்பி கொடுத்துவிட்டார்.

🎼 இந்திய கலாச்சாரத்தின் அடையாளம் மற்றும் குருதேவ் என்று அழைக்கப்பட்ட இவர் 80வது வயதில் (1941) மறைந்தார்.