Type Here to Get Search Results !

மே8

👉 உலக தாலசீமியா நோய் தினம்

👉 உலக செஞ்சிலுவை தினம்


🌷 1916ஆம் ஆண்டு மே 8ஆம் தேதி உலகம் முழுவதும் ஆன்மீக கருத்துகளைப் பரப்பிய சுவாமி சின்மயானந்தா கேரளாவில் உள்ள எர்ணாகுளத்தில் பிறந்தார்.


உலக தாலசீமியா நோய் தினம்

🌷 ஒவ்வொரு ஆண்டும் மே 8ஆம் தேதி உலக தாலசீமியா நோய் தினமாகக் கொண்டாடப்படுகிறது. தாலசீமியா என்கிற நோய் குழந்தைகளுக்குப் பிறவியிலேயே ஏற்படக்கூடிய ஒரு நோயாகும். தாலசீமியா பாதித்த குழந்தைக்கு இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கும். இதனால், அவர்களுக்கு இரத்தச்சோகை ஏற்படும்.

🌷 மேலும் சுவாசிக்கும் ஆக்சிஜன், நுரையீரலில் இருந்து மற்ற பகுதிக்கு செல்வதில் தடை ஏற்படுகிறது. அதனால், மக்களிடம் தாலசீமியா நோய்குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்தினத்தின் முக்கிய நோக்கமாகும்.


ஜீன் ஹென்றி டியூனண்ட்

🏆 அமைதிக்கான முதல் நோபல் பரிசைப் பெற்றவரும், செஞ்சிலுவை சங்கத்தை உருவாக்கியவருமான ஜீன் ஹென்றி டியூனண்ட் 1828ஆம் ஆண்டு மே 8ஆம் தேதி ஸ்விட்சர்லாந்தில் பிறந்தார். இவரது பிறந்த தினத்தை போற்றும் வகையில் ஆண்டுதோறும், உலக செஞ்சிலுவை தினம் கொண்டாடப்படுகிறது.

🏆 ஒருமுறை சால்ஃபரீனோ என்ற நகருக்கு சென்ற போது வழியில் கொடூரமான போர்க்களக் காட்சிகளைக் கண்டார். அதை பார்த்து மனம் வருந்திய இவர் மக்களோடு இணைந்து, காயமடைந்த வீரர்களுக்கு உதவினார்.

🏆 தன் சொந்த ஊரான ஜெனீவாவுக்குத் திரும்பிய பிறகும்கூட, இவருக்கு போரும் அதன் அவலங்களும் மட்டுமே நினைவில் நின்றன. அதன் காரணமாக சால்ஃபரீனோ நினைவுகள் (A Memory of Solferino) என்ற பெயரில் நூல் ஒன்றை வெளியிட்டார்.

🏆 அந்த புத்தகத்தில் உலகில் எங்கு போர் நடந்தாலும், காயமடைந்த வீரர்களுக்கு பாரபட்சமின்றி உதவ சர்வதேச அளவில் ஒரு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். என்று குறிப்பிட்டார். பிறகு 1863ஆம் ஆண்டு அந்த அமைப்பான செஞ்சிலுவை சங்கம் உருவாக்கப்பட்டது.

🏆 நோபல் பரிசு தொடங்கப்பட்ட ஆண்டான 1901ஆம் ஆண்டு இவருக்கு முதன்முதலாக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. மனிதநேயத்தை உலகம் முழுவதும் பாரபட்சமின்றி உருவாக்கிய இவர் 82வது வயதில் (1910) மறைந்தார்.