👉 மங்கள் பாண்டே நினைவு தினம்
👉 பங்கிம் சந்திர சட்டர்ஜி நினைவு தினம்
🌷 1938ஆம் ஆண்டு ஏப்ரல் 8ஆம் தேதி ஐ.நா., முன்னாள் பொதுச் செயலாளர் கோஃபி அன்னான் (Kofi Annan) கானாவின் (ஆப்பிரிக்கா) குமசியின் கோபேன்ட்ரோஸ் பகுதியில் பிறந்தார்.
🌷 2015ஆம் ஆண்டு ஏப்ரல் 8ஆம் தேதி இந்திய அரசின் இலக்கியத்திற்கான உயர்ந்த விருதான ஞான பீட விருதைப் பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர் ஜெயகாந்தன் மறைந்தார்.
🌷 1894ஆம் ஆண்டு ஏப்ரல் 8ஆம் தேதி வந்தே மாதரம் பாடலை இயற்றியவரும், சிறந்த இலக்கியவாதியுமான பங்கிம் சந்திர சட்டர்ஜி மறைந்தார்.
🌷 1950ஆம் ஆண்டு ஏப்ரல் 8ஆம் தேதி லியாகத்-நேரு ஒப்பந்தத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் கையெழுத்திட்டன.
🌷 2015ஆம் ஆண்டு ஏப்ரல் 8ஆம் தேதி இந்திய அரசின் இலக்கியத்திற்கான உயர்ந்த விருதான ஞான பீட விருதைப் பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர் ஜெயகாந்தன் மறைந்தார்.
🌷 1894ஆம் ஆண்டு ஏப்ரல் 8ஆம் தேதி வந்தே மாதரம் பாடலை இயற்றியவரும், சிறந்த இலக்கியவாதியுமான பங்கிம் சந்திர சட்டர்ஜி மறைந்தார்.
🌷 1950ஆம் ஆண்டு ஏப்ரல் 8ஆம் தேதி லியாகத்-நேரு ஒப்பந்தத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் கையெழுத்திட்டன.
🌷 சர்வதேச ரோமானிய தினம் ஏப்ரல் 8ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த தினம் 1990ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. ரோமானிய மக்களின் கலாச்சாரம் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இத்தினம் கொண்டாடப்படுகிறது.
🌷 நோபல் பரிசு பெற்ற அமெரிக்க உயிரி வேதியியலாளர் மெல்வின் எல்லிஸ் கால்வின் (Melvin Ellis Calvin) 1911ஆம் ஆண்டு ஏப்ரல் 8ஆம் தேதி அமெரிக்காவின் மினசோட்டா மாநிலம் செயின்ட் பால் நகரில் பிறந்தார்.
🌷 இவர் 1931-ல் பட்டம் பெற்ற பிறகு, ஹாலோஜன்களின் எலக்ட்ரான் நாட்டம் (Affinity of Halogens) என்பது குறித்த ஆராய்ச்சிக் கட்டுரையுடன் இவரது ஆராய்ச்சிப் பயணம் தொடங்கியது.
🌷 இவர் ஒளிச்சேர்க்கையின்போது தாவரத்துக்குள் கார்பன் பயணிக்கும் பாதையை ஆண்ட்ரூ பென்சன், ஜேம்ஸ் பாஷம் ஆகியோருடன் இணைந்து கண்டறிந்தார். இதற்கு கால்வின் சுழற்சி என்று பெயரிடப்பட்டது.
🌷 ஒளிச்சேர்க்கை குறித்த இந்த ஆராய்ச்சிக்காக கால்வினுக்கு 1961-ல் வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. வாழ்நாள் இறுதிவரை ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுவந்த கால்வின் 85-வது வயதில் (1997) மறைந்தார்.
🌷 சமண சமயத்தை உலகிற்கு அறிமுகப்படுத்திய மாபெரும் சைவ மதத்துறவி மகாவீரர் கி.மு. 599 வருடம், இந்தியாவின் பீகார் மாநிலம் வைசாலிக்கு அருகிலுள்ள குண்டா என்ற இடத்தில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் வர்த்தமானர் ஆகும்.
🌷 மனித வாழ்க்கையின் அர்த்தம் தேடி, சுமார் பனிரெண்டு ஆண்டுகள் தியானம் மற்றும் ஆன்மீகத் தேடலில் ஈடுபட்டு, சாலா என்னும் மரத்தடியில் ஞானம் பெற்றார். அதிலிருந்து இவர் மகாவீரர் (பெரும்வீரர்) என அழைக்கப்பட்டார்.
🌷 இவர் தான் கண்ட உண்மைகளை உலகத்திற்கு எடுத்துரைக்க விரும்பி, இந்தியா முழுவதும் ஆன்மீகப் பயணம் மேற்கொண்டு, தாம் அறிந்த உண்மைகளை மக்களுக்கு போதித்தார்.
🌷 ஜீனர் (வென்றவர்), மாமனிதர், ஞானப்புத்திரர், அதிவீரர் எனப் பல பெயர்களால் அழைக்கப்பட்ட சமண சமயத்தின் திருவுருவமாகவே வாழ்ந்த மகாவீரர் தன்னுடைய 72-வது வயதில் (கி.மு.527) மறைந்தார்.
🌷 இந்தியர்களின் எழுச்சிக்கு முன்னோடியாகப் பலராலும் பார்க்கப்படுபவரும், சிப்பாய் கலகம் தோன்ற காரணமானவருமான மங்கள் பாண்டே 1827ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் தேதி உத்தரப் பிரதேசத்தில் நாக்வா என்ற கிராமத்தில் பிறந்தார்.
🌷 1857ல் சிப்பாய் கலகம் ஆரம்பிக்க முக்கிய காரணமாக இருந்தவர். இவர் கிழக்கிந்தியக் கம்பெனியின் 34வது ரெஜிமென்டில் படை வீரராக பணிபுரிந்த மங்கள் பாண்டே, சிப்பாய் கலகத்தை தொடங்கி வைத்தார்.
🌷 இதில் கிழக்கிந்தியக் கம்பெனியின் அலுவலர்களுக்குகிடையே ஏற்பட்ட கலகம் காரணமாக மங்கள் பாண்டே கைது செய்யப்பட்டு 34வது படைபிரிவு கலைக்கப்பட்டது.
🌷 பிறகு கிழக்கிந்தியக் கம்பெனிக்கெதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டமைக்காக மரணதண்டனை விதிக்கப்பட்டு 1857ஆம் ஆண்டு ஏப்ரல் 8ஆம் தேதி தூக்கிலிடப்பட்டார்.
🌷 மங்கள் பாண்டேவின் வரலாற்றைச் சித்தரிக்கும் சில திரைப்படங்கள் வெளி வந்துள்ளன. Raising என்ற திரைப்படம் 2005ல் வெளிவந்தது. இந்திய அரசு மங்கள் பாண்டே நினைவாக 1984ஆம் ஆண்டு அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளது.
Social Plugin